தி.மு.க. இனி நிமிர்ந்து நிற்கும்: துரைமுருகன்

2ஜி வழக்கில் இருந்து கனிமொழி, அ.ராசா விடுதலை செய்யப்பட்டதால் தி.மு.க. இனி நிமிர்ந்து நிற்கும் என அதன் முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறினார்.
தி.மு.க. இனி நிமிர்ந்து நிற்கும்: துரைமுருகன்
Published on

புதுடெல்லி:

2ஜி வழக்கில் கனிமொழி, ராசா விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லி கோர்ட்டு வளாகத்தில் இருந்த தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியதாவது:-

தவறான அரசியல் உள்நோக்கத்துடன் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடரப்பட்ட வழக்கு இது. சூது, சூழ்ச்சிகளை எதிர்த்து நீண்ட நெடிய வாதங்களை எடுத்து வைத்தோம். இப்போது நியாயம் வென்று இருக்கிறது.

தி.மு.க. இனி நிமிர்ந்து நிற்கும். அரசியலில் சூழ்ச்சி செய்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. அதையெல்லாம் தகர்த்து நீதி வென்றது.

ஆர்.கே.நகரிலும் நாங்களே வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com