தமிழக செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

மாலை மலர்

ஆளுநர் விழாவை புறக்கணிக்கவில்லை - டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம்

* தமிழக ஆளுநர் அர்லேக்கர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.

* தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்.

வெற்றி எப்போதும் அடக்கத்துடன் சேர்ந்தே வர வேண்டும் - CJP கொண்டாட்டங்களை கண்டித்த சோனம் வாங்சுக்?

*இதுவே ஜென் இசட் தலைமுறையின் குணம்

*26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ராகுலை பின்னுக்கு தள்ளிய முதலமைச்சர் விஜய்... இன்ஸ்டாகிராமில் 1.87 கோடி பேர் பின் தொடர்கிறார்கள்

* பிரதமர் மோடி உலக அளவில் இன்ஸ்டாகிராமில் முன்னிலையில் இருந்து வருகிறார். அவரை 10.2 கோடி பேர் பின் தொடர்கிறார்கள்.

* தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை 23 லட்சம் பேரும் பின் தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொலை, கொள்ளை.. ஜூலை 20 பேரணியில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் 989 பேருக்கு குற்றப் பின்னணி - டெல்லி காவல்துறை

*101 பேர் மீது கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

*டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்ல 3 மாதத் தடை வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

* இப்போது 3 மாதங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கனிமவளக் கடத்தலுக்கானத் தடையை நிரந்தரத் தடையாக மாற்ற வேண்டும்.

* கனிமக் கொள்ளை மற்றும் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.

பயணிகளே கவனம்..! அரசுப் பேருந்துகளில் இனி 'நோ சவுண்ட்'!...

*அரசு பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பேசவோ, வீடியோ ரீல்ஸ் பார்க்கவோ தடை விதித்து போக்குவரத்துத் துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

•கட்டாயம் இயர்போன் (Earphones) ஹெட்போன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ராமேசுவரம் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை

* ஒரு படகு மற்றொரு படகுடன் மோதி சேதமடையாமல் இருப்பதற்காக நாட்டுப்படகுகள் கரைக்கு இழுத்து வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

* பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

சட்டத்தின் பாதையில் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்

* டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இதற்கு என்ன போர்க்கால நடவடிக்கையை த.வெ.க. அரசு எடுத்திருக்கிறது.

* கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய த.வெ.க. அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.

மதம் மாறிய மறு கணமே பட்டியலின அந்தஸ்து முடிவுக்கு வந்துவிடும் - உச்சநீதிமன்றம்

*பட்டியலின வகுப்பை சேர்ந்த ஒரு நபர் மதம் மாறிய மறு கணமே, அவரின் எஸ்சி அந்தஸ்து முடிவுக்கு வந்துவிடும்

* இந்து, சீக்கியர் மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எஸ்சி அந்தஸ்திற்குத் தகுதியானவர்கள் என்று தெரிவித்தது.

மீண்டும் போராடுவோம் என எச்சரித்த CJP.. பீகார், அசாம், ராஜஸ்தானில் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!

*எந்தவொரு இளைஞரையும் தனித்து விடமாட்டோம்

*பீகாரில் ஜூலை 25 அன்று நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 694 பேர் உட்பட அனைவர் மீதான வழக்கு ரத்து

6 மாதத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள்.. மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறை அதிகரிப்பு - ஐநா

*மேற்குக் கரை முழுவதும் உள்ள 230க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சமூகங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

*இஸ்ரேலிய குடியேறிகள் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தாக்குதல் நடத்தினர்.

இந்திய மாணவர்களின் வீரமிக்க போராட்டம் உலகம் முழுமைக்கும் நம்பிக்கை அளித்துள்ளது - கிரேட்டா துன்பெர்க்

*நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் உயிரிழந்த 21 மாணவர்களுக்கு அஞ்சலி.

* பிரபல இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

POK: தேர்தலை புறக்கணித்து மக்கள் போராட்டத்தில் வன்முறை - பலர் காயம்

*பல பகுதிகளில் மொபைல் மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

*பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) நேற்று முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.

வைரல் தெலுங்கு நடிகை ஸ்யாமலா மறைவு

*போதிய பணம் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சாலையில் நிர்கதியாய் விட்டுச் சென்றனர்.

*நள்ளிரவில் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா - அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு

* பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

* முனைவர் பட்டம் வாங்க இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பட்டம் வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

ஆகஸ்ட் 1 முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய டோக்கன்- நெரிசலை குறைக்க ரெயில்வே நடவடிக்கை

* ரெயில் நிலைய முன்பதிவு மையங்களில் கடுமையான கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

* ஆதார் அட்டை அல்லது பிற செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க!- அன்புமணி வலியுறுத்தல்

* தொகுப்பூதிய பணியாளர்களாக பணியாற்றும் 53 பேரும் 50 வயதைக் கடந்தவர்கள். இந்த வயதில் அவர்களால் வேறு எங்கும் சென்று வேலை தேட முடியாது.

* தொகுப்பூதிய பணியாளராக 10 ஆண்டுகளை எப்போது அவர்கள் நிறைவு செய்தார்களோ, அப்போது முதல் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக கருதப்பட்டு பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்.

CJP PROTEST: போலீஸ் வேனை மறித்த புகழ்பெற்ற மாடல் அழகி மும்பை போலீசில் புகார்!...

*சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் அவருக்கு எதிராகத் தொடர் அவதூறுகளையும் மனரீதியான தாக்குதல்களையும் தொடுக்கத் தொடங்கினர்.

*"இந்த அநீதிக்கு எதிராக நிற்க வேண்டும் என்பதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளேன்"

GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக சரிந்த தங்கம் விலை

* தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,215-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி- அடுத்த மாதம் அறிமுகப்படுத்த திட்டம்

* பழைய வைப்பு நிதி கணக்குகளில் இருந்த தரவுகள் புதிய தளத்தில் விடுபட்டுள்ளதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

* அனைத்து முக்கிய தொழில்நுட்ப கோளாறுகளும் முன்னுரிமை அடிப்படையில் சரிசெய்யப்பட்டு வருகின்றன. அதன் பின்னரே தற்போதைய நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மனுக்களுடன் மட்டுமே வாருங்கள்; பணத்துடன் வந்தால் அனுமதி இல்லை- தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்

* லஞ்சத்திற்கு எதிராக தாசில்தார் எடுத்துள்ள இந்த துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

* தாலுகா அலுவலகத்துக்கு வருபவர்கள் பணத்துடன் வருவதை தவிர்த்து, கோரிக்கை மனுக்களை மட்டுமே கொண்டுவர வேண்டும் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.