நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா - அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு

தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
Published on

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

அமைச்சர் விஸ்வநாதன்

இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து அவர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளார்.

டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்

மதுரையில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தற்போது வரை நெல்லைக்கு புறப்படவில்லை. இன்று முனைவர் பட்டம் வாங்க இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பட்டம் வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதாக அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்துவதால் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக நெல்லை தவெக எம்எல்ஏ முருகன் அறிவித்துள்ளார். பட்டமளிப்பு விழாவில் இன்று நடைபெறும் நிலையில் ஆளுநரை கண்டித்து புறக்கணிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் அறிவித்த நிலையில் நெல்லை எம்எல்ஏ முருகனும் அறிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com