கொலை, கொள்ளை.. ஜூலை 20 பேரணியில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் 989 பேருக்கு குற்றப் பின்னணி - டெல்லி காவல்துறை

101 பேர் மீது கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
July 20 rally violence - Delhi
July 20 rally violence - Delhi
Published on

ஜூலை 20 அன்று டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியின்போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக, டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

அதில், காவல்துறையினரைத் தாக்கியது மற்றும் அரசு வாகனங்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட வன்முறைச் செயல்களில் ஈடுக்கப்பட்டவர்கள் குற்றப்பின்னணி கொண்டவர் என கண்டறிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏஐ தொழில்நுட்பத்தால் ஆய்வு

கேமராக்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் பொதுமக்கள் எடுத்த வீடியோக்களை ஏஐ தொழில்நுட்பத்தால் ஆய்வு செய்து போலீசார் மற்றும் வாகனங்களை தாக்கிய 2,873 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் , 989 நபர்கள் கொடூரமான குற்றப் பின்னணி கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.

குற்றப் பின்னணி

அதன்படி, பேரணியில் வன்முறையில் ஈடுபட்ட 101 பேர் மீது கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. 284 பேர் மீது கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன.

61 பேர் மீது பாலியல் வன்கொடுமை, 25 பேர் மீது பெண்களைத் துன்புறுத்துதல் 6 பேர் பேர் மீது மற்றும் போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவாகியுள்ளன.

229 பேர் ஆயுத சட்டம் வழக்குகளிலும், 135 பேர் செயின் பறிப்பு வழக்குகளிலும், 19 பேர் கடத்தல் வழக்குகளிலும், 67 பேர் போதைப்பொருள் வழக்குகளும் உள்ளன." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலப்பிரயோகம்

மேலும், ஜந்தர் மந்தரில் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தடுப்புகளை உடைத்து நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறியதாலும், தொடர்ந்து எச்சரிக்கைகளை மீறியதாலுமே பலப்பிரயோகம் செய்யப்பட்டது.

தீவிரக் குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடரும் என்றும், மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜூலை 20 தாக்குதல்

ஜூலை 20, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சிஜேபி தலைமையில் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர்.

அப்போது அவர்கள் மீது டெல்லி காவல்துறை, ஆர்ஏஎப் மத்திய படையினர் லத்திகளால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகுகள் வீசப்பட்டன.

ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளும் மாணவர்கள் மீது பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 60 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 118 போலீசாரும் காயமுற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com