தமிழக செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 16 அக்டோபர் 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

தமிழ்நாடு செய்திப்பிரிவு

ரஷியாவில் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ஜப்பானில் 9.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பீதி

*இந்த நிலநடுக்கம் 152 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.

* எச்சரிக்கை உண்மையாக இருந்திருந்தால், அது இதுவரை பதிவுசெய்யப்பட்டதிலேயே மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இருந்திருக்கும்.

டெண்டர் முதல் நாள் ரத்து - அடுத்த நாள் மீண்டும் நடைமுறை: நிர்வாக முடிவுகளை எடுப்பதில் அரசுக்கு தடுமாற்றம் ஏன்?- அன்புமணி கேள்வி

* மாநகரப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கடந்த மார்ச் மாதம் கோரப்பட்டன.

* தமிழக அரசால் வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அரசுக்கே தெரியாமல் எவ்வாறு ரத்து செய்யப்படும் என்பது தெரியவில்லை.

நாட்டில் எல்லோருமே பத்திரிகையாளர் ஆக ஆரம்பித்துவிட்டால் அனைவருக்கும் பிரச்சனை தான் - உச்சநீதிமன்றம்

*கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் ஒரு பத்திரிகையாளராக ஆக்குமா என்பதை விரிவாக ஆராய வேண்டும்.

* பெண் பத்திரிகையாளரைக் கைது செய்யவோ அல்லது அவர் மீது கடுமையான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவோ கூடாது

தேசிய கொடியை ஏந்தியதற்காக சிறை செல்ல தயார்.. டெல்லியில் இன்று CJP திரங்கா பேரணி - கட்டுப்பாடுகளை தொடர்ந்து தீப்கே பேட்டி

*மாறுவேடமிட்ட காவல்துறையினர் தனது தங்குமிடத்தை சுற்றி வளைத்து, ஒரு வெள்ளை நிற ஸ்கார்பியோ காரில் தன்னைப் பின்தொடர்ந்ததாக தீப்கே குற்றம் சாட்டினார்.

*இந்த நாட்டில் மூவர்ணக் கொடியை அசைப்பதற்காக நாங்கள் சிறைக்குச் செல்ல நேர்ந்தாலும், அதற்கும் நாங்கள் தயார்

அமெரிக்கா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டால்; இந்தியா பாகிஸ்தானுடன் நிற்கும் - போட்டுடைத்த ராஜஸ்தான் பாஜக மாநில தலைவர்

*பாகிஸ்தான் மீது பாஜகவுக்கு உள்ள பற்றை அம்பலப்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் சந்தீப் குப்தா குற்றம் சாட்டினார்.

*நமது வீரர்களையும் மக்களையும் கொல்லும் பயங்கரவாத நாடான பாகிஸ்தான் மீதான பாஜகவின் பற்று மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது.

நேரலையில் மரண தண்டனையை ஒளிபரப்பபோவதில்லை.. கடும் எதிர்பால் பின்வாங்கிய டிரம்ப்

*நாட்டின் கௌரவத்தை களங்கப்படுத்தும் என்று கூறி, அதனை நிறுத்துமாறு டிரம்ப்பிடம் வலியுறுத்தினர்.

*1961க்கு பிறகு அமெரிக்க ராணுவ நீதிமன்றத்தால் நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனையாக இருக்கும் என கூறப்பட்டது.

அரசியல் எதிரிகளை சித்திரவதை செய்ய உத்தரவு.. அமெரிக்க நீதிமன்றத்தில் மதுரோ மீது புதிய குற்றச்சாட்டு - 50 ஆண்டுகள் சிறைக்கு வாய்ப்பு

*கொடூரமாக சித்திரவதை செய்ய மதுரோ நேரடியாக உத்தரவிட்டார்

*புதிய குற்றச்சாட்டுகளை அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் சேர்த்துள்ளனர்.

VIDEO: ஏமன் அதிபர் மாளிகை மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்.. 5 பேர் பலி - உயிர் தப்பிய பிரதமர்

*சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசு ஏடனை இடைக்கால தலைநகராக கொண்டு செயல்பட்டு வருகிறது.

*இந்தத் தாக்குதல் மொத்தம் 5 பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு நடத்தப்பட்டதாக யேமனின் தகவல் அமைச்சர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் 10 லட்சம் வாக்காளர்களில் 93 ஆயிரம் வாக்காளர்கள் தகுதியற்றவர்களாக அறிவிப்பு

* பெயர் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய, நாளை (சனிக்கிழமை) அனைத்து வாக்கு சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும்.

* பெயர் சேர்க்க https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமும் விண்ணப்பிக்கலாம்.

ஆயுதபூஜை தொடர் விடுமுறை - ரேஷன் கடைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்கும்: தமிழக அரசு

* ஆயுதப்பூஜை (19-ந்தேதி), சரஸ்வதி பூஜை (20-ந்தேதி) தொடர் விடுமுறை வருகிறது.

* விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 21-ந்தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

அமுதம் அங்காடி, கூட்டுறவு ரேஷன் கடைகளில் அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனை: தமிழக அரசு நடவடிக்கை

* விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுவதாக எதிர்க்கட்சிகளும் சுட்டிக்காட்டி வருகின்றன. 

* பொதுமக்களின் தேவைக்கேற்ப 5 கிலோ வரை இவ்வார இறுதியில் இருந்து வழங்கப்படும்.

திறந்து வைப்பதில் அல்ல.. திட்டமிட்டு உருவாக்குவதில்தான் பெருமை! - பெரியார் அறிவுலகம் திறப்பு பற்றி மு.க.ஸ்டாலின்

* பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பெயரிலான அறிவுலகம் இன்று கோவையில் திறக்கப்படுகிறது. மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது!

* அறிவு, அறிவு, அறிவு என அறிவை மையப்படுத்தியே இயங்கி வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.

SCROLL FOR NEXT