ரஷியாவில் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ஜப்பானில் 9.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பீதி

இந்த நிலநடுக்கம் 152 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.
நிலநடுக்கம்
Published on: 
Summary

ரஷியாவின் கம்சாத்கா தீபகற்பதில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரஷியாவின் கம்சாத்கா தீபகற்பதில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகி உள்ளது. சில தரவுகளில் இது 7 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

ரஷியாவின் கம்சாத்கா தீபகற்பத்தில் உள்ளூர் நேரப்படி 12:38 p.m க்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 152 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. இதனால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து ஜப்பானிலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பீதியை கிளப்பிய ஜப்பான்

குறிப்பாக ஜப்பானின் வானிலை ஆய்வு மையம், தவறுதலாக 9.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மதிப்பிட்டு, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான அதிர்வு ஏற்படும் என முன்கூட்டிய எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த எச்சரிக்கை உண்மையாக இருந்திருந்தால், அது இதுவரை பதிவுசெய்யப்பட்டதிலேயே மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இருந்திருக்கும்.

வரலாற்றில் கருவிகள் மூலம் பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், 1960ஆம் ஆண்டு சிலி நாட்டின் வால்டிவியாவில் ஏற்பட்ட 9.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆகும்.

கம்சாத்கா தீபகற்பம்

ரஷியாவின் கம்சாத்கா தீபகற்பம், பசிபிக் பெருங்கடலின் பெரும்பகுதியைச் சூழ்ந்துள்ள 'நெருப்பு வளையம்' எனப்படும் புவித்தட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி அடிக்கடி நில அதிர்வு பாதிப்புக்குள்ளாக கூடியதாக கருதப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம், அப்பகுதியின் கடலோரப் பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com