search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் வெற்றி குறித்து மகிழ்ச்சி: பிரிவினைவாத தலைவருக்கு காம்பீர் கண்டனம்
    X

    பாகிஸ்தான் வெற்றி குறித்து மகிழ்ச்சி: பிரிவினைவாத தலைவருக்கு காம்பீர் கண்டனம்

    சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றியது குறித்து கருத்து தெரிவித்திருந்த பிரிவினைவாத தலைவருக்கு இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் 180 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.

    காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் சிலர் பாகிஸ்தான் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர் மிர்வாய்ஸ் உமர் பாரூக்கும் பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

    அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் எங்கும் பட்டாசு சத்தம் தான் கேட்கிறது. ரம்ஜான் பண்டிகை முன்னதாக வந்துவிட்டது போல் உணர்கிறேன். அந்த நாளில் சிறப்பாக விளையாடும் அணி வெற்றி பெறும். பாகிஸ்தான் அணிக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.



    இதற்கு இந்திய அணி முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது மிர்வாயஸ் உமர் பாரூக்கு எனது வேண்டுகோள். எல்லையை தாண்டி நீங்கள் ஏன்? செல்லக் கூடாது. அங்கு இதைவிட அதிகமான பட்டாசு சத்தம் கேட்குமே. ரம்ஜானையும் கொண்டாடலாம். உங்களது பெட்டி படுக்கையை எடுத்து செல்ல நான் உதவுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×