என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்
    • ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம். ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது. இதனிடையே இப்படத்தின் அடி அலையே, ரத்னமாலா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான, நமக்கான காலம் பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 


    • நட்டி சுப்ரமணியம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
    • ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சசிகுமார் வெளியிட்டுள்ளார்.

    கேத்திரன் இயக்கத்தில், ராஜசேகரன் தயாரிப்பில் நடிகர் விமல் மற்றும் புதுமுக நடிகை சங்கீதா நடிப்பில் உருவாகி உள்ள படம் வடம். இப்படத்தில் நட்டி சுப்ரமணியம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படம் வடமாடு குறித்த கதையை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, கோவை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

    இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சசிகுமார் வெளியிட்டுள்ளார். மண், மக்கள், மரியாதை, வீரம் நான்கும் பேசும் படம் வடம் என சசிகுமார் குறிப்பிட்டுள்ளார். டீசர், படம் வெளியீடு குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   


    • மியான்மரில் நடக்கும் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க முயலும் ரோஹிங்கியா இனத்தை சேர்ந்த அண்ணன், தங்கை என இரு குழந்தைகளைப் பற்றிய உணர்வுப்பூர்வமான சித்திரம் 'லாஸ்ட் லேண்ட்' .
    • 'லாஸ்ட் லேண்ட்' திரைப்படம், முன்னதாக வெனிஸ் திரைப்பட விழாவின் 'ஒரிஸோன்டி' பிரிவில் அரங்கேற்றம் செய்யப்பட்டு, சிறப்பு நடுவர் பரிசை வென்றது.

    சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் Red Sea சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 4 தொடங்கி நேற்று (டிசம்பர் 13) உடன் முடிவடைந்தது.

    இந்த விழாவில் பாலிவுட் நடிகர்களான கார்த்திக் ஆர்யன், சல்மான் கான், ஆலியா பட், கிருத்தி சனோன் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

    இந்த விழாவில் முழுக்க ரோஹிங்கியா மொழியில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமான "லாஸ்ட் லேண்ட்" (Lost Land) படம் சிறந்த திரைப்படத்திற்கான 'கோல்டன் யுஸ்ர்' விருதை வென்றுள்ளது.

    ஜப்பானியத் திரைப்படத் தயாரிப்பாளர் அக்கியோ புஜிமோட்டோ இந்த திரைப்பதை இயக்கி உள்ளார்.

    மியான்மரில் நடக்கும் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க முயலும் ரோஹிங்கியா இனத்தை சேர்ந்த அண்ணன், தங்கை என இரு குழந்தைகளைப் பற்றிய உணர்வுப்பூர்வமான சித்திரம் 'லாஸ்ட் லேண்ட்' .

    9 வயது சோமிரா மற்றும் அவளது தம்பி ஷாஃபி ஆகியோர், மலேசியாவில் இருக்கும் தங்கள் மாமாவிடம் சென்று சேருவதற்காக, நிலத்திலும் கடலிலும் கடத்தல்காரர்கள் மற்றும் பல அச்சுறுத்தல்களை தாண்டி செல்லும் துயரமான பயணத்தை இப்படம் சித்தரிக்கிறது.

    'லாஸ்ட் லேண்ட்' திரைப்படம், முன்னதாக வெனிஸ் திரைப்பட விழாவின் 'ஒரிஸோன்டி' பிரிவில் திரையிடப்பட்டு, சிறப்பு நடுவர் பரிசை வென்றது.

    ஆசியா பசிபிக் திரை விருதுகளிலும் நடுவர்களின் கிராண்ட் பரிசை இப்படம் பெற்றது.  

    • இந்தியில் இவர் மாஸ் ஆக்க்ஷன் ஹீரோவாக கமாண்டோ 1,2,3 என பல படங்களில் நடித்துள்ளார்.
    • கடைசியாக சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் வில்லனாக தோன்றியிருந்தார்.

    துப்பாக்கி படத்தில் விஜய்க்கு நிகராக ரசிகர்களை ஈர்த்தவர் அப்படத்தில் வில்லனான நடித்த வித்யுத் ஜாம்வால்.

    தொடர்ந்து சூர்யாவின் அஞ்சான், கடைசியாக சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் வில்லனாக தோன்றியிருந்தார்.

    ஆனால் இந்தியில் இவர் மாஸ் ஆக்க்ஷன் ஹீரோவாக கமாண்டோ 1,2,3 என பல படங்களில் நடித்துள்ளார். உடற்பயிற்சி, கட்டுக்கோப்பான உடல், தற்காப்பு கலை உள்ளிட்டவத்திற்கு விதியுத் பெயர் பெற்றவர்.

    இந்நிலையில் விதியுத் பாலிவுட் தாண்டி ஹாலிவுட்டில் களமிறங்கி உள்ளார். "ஸ்டிரீட் ஃபைட்டர்" எனும் புதிய படத்தில் தல்சிம் எனும் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.

    அவரின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது. ஸ்டிரீட் ஃபைட்டர் என்பது ஹாலிவுட்டில் பிரபல திரைப்பட சீரீஸ் ஆகும்.

    2026 வெளியாக உள்ள இந்த படத்தில் வித்யுத் உடன் பிரபல மல்யுத்த வீரர் ரோமன் ரெய்ன்ஸ் "அகுமா" எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

    தமனின் இசை படத்திற்கு மற்றொரு பலம்.

    அகண்டா முதல் பாகத்தில் தனது தம்பி மகள் ஹர்ஷாலிக்கு ஏதாவது கஷ்டம் ஏற்பட்டால் உடனடியாக அங்கு நான் வருவேன் என அகண்டா சத்தியம் செய்திருந்தார். இதில், இருந்து 2ம் பாகம் தொடர்கிறது. ஆண்டுகள் கடந்து செல்ல பாலைய்யாவின் மகள் நன்றாக வளர்ந்து விஞ்ஞானியாக பணிபுரிகிறார். இது ஒருபக்கம் இருக்க, இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்கிற எண்ணத்துடன் எதிர்நாட்டில் உள்ள ஜெனரல், இந்தியர்களை கொன்று குவிக்கிறார்.

    கடவுள் நம்பிக்கையுள்ள இந்திய மக்கள், இனி கடவுளே ஒருவர் இல்லை என்று கடவுளை வெறுக்கும் வகையில் முடிவு கட்ட திட்டமிடுகிறார் எதிர்நாட்டு ஜெனரல். இதற்காக, நாட்டில் உள்ள அரசியல்வாதியுடன் கைகோர்த்து மகா கும்பமேளாவிற்கு வரும் மக்கள் மேல் வைரஸை பரப்பி விடுகிறார்கள்.

    இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. நாடு முழுவதும் பிரச்சனை வெடிக்கிறது. அப்போது, கடவுளே இல்லை என வெறுக்கும் மக்கள் நம்பிக்கையை இழக்கின்றனர். இந்தநிலையில், விஞ்ஞானியான பாலைய்யாவின் மகள் ஹர்ஷாலி, பரவிக் கொண்டிருக்கும் வைரசை அழிக்கும் மருந்தை கண்டுபிடிக்கிறார். இது எதிரி நாட்டிற்கு தெரிய வர, விஞ்ஞானிகள் குழுவையும் அழிக்கிறது.

    அங்கிருந்து தப்பிக்கும் ஹர்ஷாலியை கொலை செய்ய அந்த கூட்டம் துரத்துகிறது.எதிரி கூட்டத்திடம் இருந்து ஹர்ஷாலியை காப்பாற்ற அகண்டா வந்தாரா? வைரசை அழிக்க கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை மக்களிடம் கொண்டு சேர்த்தாரா? மக்கள் மத்தியில் கடவுள் நம்பிக்கை வந்ததா? என்பது படத்தின் மீதி கதை..

    நடிகர்கள்

    கதாநாயகனாக நடித்துள்ள பாலகிருஷ்ணா அவருக்கே உரிதான நடிப்பில் மொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து செல்கிறார். சண்டை, நடனம், வசனம் என அனைத்திலும் மாஸ். பாலய்யா ரசிகர்களுக்கு அகண்டா 2 ஸ்பெஷல் விருந்து என்றே சொல்லலாம்.

    அகண்டா கதாபாத்திரத்தை தவிர வேறு யாருக்கும் வலுவான ரோல் இல்லை.படம் முழுவதும் பாலய்யாவின் மேஜிக்தான் நிறைந்திருக்கிறது. படம் பார்க்க வருபவர்கள் லாஜிக் எதிர்க்காமல் வந்தால் நல்லது.

    இயக்கம்

    பாலகிருஷ்ணா என்ற கூர்மையான ஆயுதத்தை 4-வது முறையாக பட்டை தீட்டி இருக்கும் இயக்குனர் போயபட்டி ஸ்ரீனு, இந்த முறையில் மாஸ் கதையை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.

    இசை

    தமனின் இசை படத்திற்கு மற்றொரு பலம்.

    ஒளிப்பதிவு

    அகண்டா 2 படத்தை அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

    ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக பராசக்தி திரைக்கு வருகிறது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் 'பராசக்தி'. ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.

    இதனிடையே, சமீபத்தில் வெளியான 'பராசக்தி' படத்தின் ப்ரோமோ மற்றும் முதல் பாடலான 'அடி அலையே' ஆகியவை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    இதனை தொடர்ந்து 'பராசக்தி' படத்தின் 2-வது பாடலான 'ரத்னமாலா' கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'பராசக்தி' படத்தின் 3வது பாடலான 'நமக்கான காலம்' நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    • பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 50 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை
    • பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற பதற்றமும் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.

    பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 50 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. அதாவது, தேவையில்லாத சண்டைகள் ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும், பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் வெளியேறுவார்கள். அப்படி, கடந்த சில வாரங்களாக பிரவீன் காந்தி, நந்தினி, அரோரா சி.ஜே., ஆதிரை, துஷார், பிரவீன் காந்தி, திவாகர், கெமி, பிரஜின் ஆகியோர் வெளியேறினார்கள்.

    இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரம்யா ஜோ வெளியேறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் கடந்த 50 நாட்களாக என்ன செய்கிறார் என்று தெரியாமலேயே இருந்த ரம்யா ஜோ தற்போது வெளியேறியுள்ளார்.

    சௌந்தர்யன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    அரசு பள்ளி ஆசிரியரான நாயகன் பிரபாகரன், மாணவர்களுக்கு படிப்பை மட்டும் சொல்லிக் கொடுக்காமல், சமூகப் பணி மற்றும் அரசியல் பற்றியும் கற்றுக் கொடுத்து, அநீதிகளுக்கு எதிராக போராடும் எண்ணத்தையும் மனதில் விதைக்கிறார். தொடர்ந்து ஆசிரியர் பிரபாகரனின் அதிரடி நடவடிக்கையால், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் லெனின் வடமலை பாதிக்கப்படுகிறார்.

    இதனால், ஆசிரியர் பிரபாகரனை பழிவாங்குவதற்கு சரியான நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் லெனின் வடமலை. இந்த நிலையில், பள்ளியில் புதிதாக வேலைக்கு சேரும் ஆசிரியை மேஹாலி மீனாட்சியும், பிரபாகரனும் காதலிக்கிறார்கள். மேஹாலி மீனாட்சி ஏற்கனவே திருமணமானவராக இருக்கிறார்.

    இறுதியில் திருமணமான மேஹாலி மீனாட்சி பிரபாகரனை காதலிப்பது ஏன்? வில்லன் லெனின் வடமலை, பிரபாகரனை பழி வாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    கதாநாயகனாக நடித்திருக்கும் பிரபாகரன், கிராமத்து ஆசிரியர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் மேஹாலி மீனாட்சி, குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து கவர்ந்து இருக்கிறார்.

    வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் லெனின் வடமலை, தோற்றம் மற்றும் நடிப்பு இரண்டிலும் மறைந்த டேனியல் பாலாஜியை நினைவுப்படுத்துகிறார். வில்லன் லெனின் வடமலையின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் துகின் சே குவேரா, வியக்க வைக்கும் விதத்தில் வசன உச்சரிப்பு, உடல் மொழி என்று நடிப்பில் மிரட்டுகிறார்.

    இயக்கம்

    சாதி பாகுபாடு மற்றும் மூடநம்பிக்கையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் லெனின் வடமலை. தற்போதைய காலக்கட்டத்தில், அறிவியலும், தொழில்நுட்பமும் மிகப்பெரிய வளர்ச்சியடைந்தாலும், இன்னமும் சாதி பாகுபாடு மற்றும் மூடநம்பிக்கையில் மூழ்கியிருக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். விறுவிறுப்பான காட்சிகள் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    இசை

    சௌந்தர்யன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ஜான்ஸ் வி.ஜெரின், தனது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.

    ரேட்டிங்- 2/5

    • ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!
    • பிறந்தநாளை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர்.

    நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர்.

    இந்த நிலையில், தி.முக. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ரஜினிக்கு எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    அந்த பதிவில் அவர்,"ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!

    மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை!

    உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!

    ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

    மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்! என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்,"என் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அன்பு நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி" என்றார்.

    இதேபோல், பிறந்த நாள் வாழ்த்து கூறிய எனது அருமை நண்பர் கமல்ஹாசனுக்கும் எனது நன்றி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில், "என் பிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அருமை நண்பர் திரு கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி" என்றார்.

    • அடுத்த ஆண்டில் அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.
    • கார் ரேஸில் அஜித் பங்கேற்ற கார் பாதியில் பழுதாகி நின்றது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித் குமார். சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.

     

    இதற்கு முன்னதாக மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றுள்ளது. இந்த நிலையில், கார் ரேஸில் அஜித் பங்கேற்ற கார் பாதியில் பழுதாகி நின்றது. அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதனை தொடர்ந்து கார் பழுதாகி நின்றது தொடர்பாக நடிகர் அஜித்திடம் கேட்கப்பட்டதற்கு, கவலைப்பட ஒன்றுமில்லை. பந்தயம் என்றால் அதுதான். ஆம், அது சோர்வடையச் செய்கிறது. ஆனால் எப்போதும் இன்னொரு போட்டி இருக்கும் என்றார்.


    • இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 18-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    மேலும் இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 18-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இந்த நிலையில், 'ரெட்ட தல' படத்தின் 'டார்க் தீம்' பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலை சாம் சி.எஸ். எழுதி, இசையமைத்து பாடியுள்ளார். முன்னதாக வெளியான 'கண்ணம்மா' பாடல் சாம்.சி.எஸ் எழுதி தனுஷ் குரலில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.


    • அந்தப் படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
    • எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன்.

    சின்னத்திரையில் ஜொலித்த சந்தானம், சிம்புவின் 'மன்மதன்' படம் மூலமாக வெள்ளித்திரையில் எட்டிப் பார்த்தார். அதன்பிறகு முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவையில் கலக்கிய அவர், தற்போது கதாநாயகனாக கலக்கி வருகிறார்.

    இதற்கிடையில் வெள்ளித்திரையில் தனக்கு அறிமுகம் தந்த சிம்பு கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, அவர் நடிக்கும் புதிய படத்தில் சந்தானம் நடிக்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த சூழலில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்-2' படத்தில் சந்தானம் நடிக்கிறார் என்ற பேச்சு அடிபடுகிறது.

    இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ''எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். அது என்ன கள்ளக்காதலா? மறைத்து செய்ய... படம் தானே... சொல்லிட்டு தான் செய்வேன்'' என சந்தானம் தெரிவித்தார்.

    ×