என் மலர்
- கடந்த 2013 இல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'ராஞ்சனா'. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது.
- இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது.
பாலிவுட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2013 இல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'ராஞ்சனா'. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஒரு கிளாசிக்.
இந்நிலையில் தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein).
இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். கடந்த வாரம் வெளியான இப்படம் பாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், 'தேரே இஷக் மெய்ன்' படம் 7 நாட்களில் உலகளவில் ரூ.118.76 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
- ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் எம்.பி இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
- ஏவிஎம் சரவணன் 1958ஆம் ஆண்டு முதல் தலைமையேற்று பல வெற்றித் தமிழ் படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை வயது மூப்பின் காரணமாக பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்தனர்.
ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் எம்.பி இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ஏவிஎம் என்ற தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு மரம் நான் என்று கமல் பேசியிருந்தார்.
இந்நிலையில் ஏவிஎம் சரவணன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் கூறி உள்ளார்.
ஏ.வி. மெய்யப்பன் தொடங்கிய பழம்பெரும் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தை அவரது மகனான ஏவிஎம் சரவணன் 1958ஆம் ஆண்டு முதல் தலைமையேற்று பல வெற்றித் தமிழ் படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கன்னட திரை உலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளார்.
- இந்த இசை ஆல்பத்தில், ஷாமுடன் நடிகை நிரா இணைந்து நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்து பயணித்து வருபவர் நடிகர் ஷாம். தற்போது முதன் முறையாக ஆல்பம் தயாரிப்பில் இறங்கி, 'வரும் வெற்றி' என்கிற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளதன் மூலம் ஒரு இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஷாம்.
SIR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தில், ஷாமுடன் நடிகை நிரா இணைந்து நடித்துள்ளார். அம்ரிஷ் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் வடிவமைத்துள்ளார்.

கன்னட திரை உலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளார் என்பது தான் இந்த ஆல்பத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம்.
பிரபலமான டி சீரிஸ் நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது.
தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்
இயக்கம் ; ஷாம்
ஒளிப்பதிவு ; K.A.சக்திவேல்
இசை ; அம்ரீஷ்
படத்தொகுப்பு ; லாரன்ஸ் கிஷோர்
நடனம் ; ஸ்ரீதர்
பாடல் ; ஜெகன்
கலை ; வி.ஆர் ராஜவேல்
ஸ்டன்ட் ; மான்ஸ்டர் முகேஷ்
ஆடை வடிவமைப்பு ; நிரா
ஒப்பனை ; வீரசேகர்
விளம்பர வடிவமைப்பு ; தினேஷ் அசோக்
மக்கள் தொடர்பு ; A. ஜான்
- இசையமைப்பாளர் முகமது மக்பூல் மன்சூரின் பின்னணி இசை கதையோடு இணைந்து பயணித்து இருக்கிறது.
கிராமத்தில் இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வரும் கீதா கைலாசம், பால் வியாபாரம், விவசாயம் என்று கடுமையாக உழைத்து வருகிறார். இவர் தைரியமான பெண்ணாகவும், மேல் சட்டை (ஜாக்கெட்) அணியாமல் பழமைவாத பெண்மணியாகவும் வலம் வருகிறார்.
மூத்த மகனான பரணி திருமணமாகி அம்மாவுடன் இருக்க, இரண்டாவது மகன் சரண் நன்றாக படித்து மருத்துவராகிறார். இவர் பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்க, அவரது காதலுக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கிறார்கள். பெண் வீட்டார் ஜாக்கெட் அணியாமல் இருக்கும் தனது தாயை பார்த்து தவறாக நினைப்பார்கள் என்று சரண் வருந்துகிறார்.
இதனால் தனது தாய் மேல் சட்டை அணிய வேண்டும் என்று விரும்புகிறார். இதற்காக அவர் நேரடியாக தனது தாயிடம் சொல்லாமல், அண்ணி மற்றும் ஊர் மக்கள் மூலமாக தாயை மேல் சட்டை அணிய வைக்கிறார். ஆனால், அவர் தினங்களில் மீண்டும் மேல் சட்டையை அணிய மறுக்கிறார்.
இறுதியில் கீதா கைலாசம் மேல் சட்டை அணிந்தாரா? மேல் சட்டை அணிய மறுக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம், ஜாக்கெட் அணியாமல் இருப்பது, சுருட்டு பிடிப்பது படத்தின் முழு கதையையும் தாங்கி பிடித்து இருக்கிறார். இவரது அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.
மூத்த மகனாக நடித்திருக்கும் பரணி, அவரது மனைவியாக நடித்திருக்கும் தென்றல், இளைய மகனாக நடித்திருக்கும் சரண், அவரது காதலியாக நடித்திருக்கும் முல்லையரசி, சரணின் நண்பராக நடித்திருக்கும் சுதாகர், ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இயக்கம்
அங்கம்மாள் என்ற பெண்மணியின் வாழ்வியலை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன். சுதந்திரமான பெண்ணாக இருந்தாலும், பிள்ளைகள் மூலம் அவரது சுதந்திரம் பரிக்கப்படுவதும், அவர்களுக்காக அடிபனிவதும் என்று திரைக்கதை அமைத்து இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.
இசை
இசையமைப்பாளர் முகமது மக்பூல் மன்சூரின் பின்னணி இசை கதையோடு இணைந்து பயணித்து இருக்கிறது.
ஒளிப்பதிவு
அன்ஜாய் சாமுவேல் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறது. பல காட்சிகள் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
ரேட்டிங்- 3.5/5
- படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர்.
- 2005-ல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.
செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் (Self Start Productions) சார்பில், KJ சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் மாயபிம்பம். புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
புதுமுக நடிகர் - நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்களே. படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர்.

2005-ல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி வெளியிட்டு, படத்தின் ஒரு பாடலையும் பார்ததுவிட்டு படக்குழுவை பாராட்டினார்.
- விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- நாடு முழுவதும் 550 விமானங்கள் ரத்தான நிலையில் பல்வேறு தரப்பினர் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய விமான போக்குவரத்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 550 இண்டிகோ விமானங்கள் ரத்தாகியுள்ளன.
விமானிகளுக்கான புதிய விதிமுறைகள், ஊழியர்கள் பற்றாக்குறை, மோசமான வானிலை, பயணிகள் நெரிசல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த நடவடிக்கை என நிர்வாக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தில் 550 விமானங்கள் ரத்தான நிலையில் பல்வேறு தரப்பினர் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விமான சேவை பாதிப்புக்கு நடிகை மெஹ்ரீன் பிர்சாடா தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆதங்கத்தை பதிவாக வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
நரகத்திற்கு போ இண்டிகோ! இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. விமான நிலையங்களில் பயணிகள் பல நாட்களாக சிக்கித் தவிக்கின்றனர், ஆனால் உங்கள் செயலி விமானங்கள் ஏறும் நேரத்தில் ரத்து செய்யும் வரை "சரியான நேரத்தில்" இருப்பதைக் காட்டுகிறது. இது ஒரு தொழில்நுட்ப கோளாறு அல்ல - இது அலட்சியம்.
புதிய DGCA விதிகள் நடைமுறையில் இருப்பதால், வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துவதற்குப் பதிலாக உங்கள் அட்டவணையை நீங்கள் சரிசெய்திருக்க வேண்டும். நீங்கள் உருவாக்கிய குழப்பம் அபத்தமானது. என்ன நடக்கிறது என்பதை விளக்குங்கள், உங்களால் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு இழப்பீடு வழங்குங்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் கதிர் இப்படத்தில் முக்கிய நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாகவும் கூறப்பட்டது.
- இனிவரும் நாட்களில் ‘தலைவர் 173’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது படத்தை 'பார்க்கிங்' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் இயக்கப்போவதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் கதிர் இப்படத்தில் முக்கிய நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாகவும் கூறப்பட்டது.
இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்தும் எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது 'தலைவர் 173' படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

படத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருவதால் இனிவரும் நாட்களில் 'தலைவர் 173' குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கருக்கு இப்படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாய் அபயங்கர் தற்போத சூர்யாவின் 'கருப்பு', ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்', அல்லு அர்ஜூன் - அட்லீயின் கூட்டணியில் உருவாகி வரும் AA22XA6 மற்றும் கார்த்தியின் மார்ஷல் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உயிரிழந்த சரவணனின் உடல் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
- ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்
இன்று காலை வயது மூப்பின் காரணமாக பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் எம்.பி இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "ஏ.வி.எம். சரவணன் அவர்களுக்கும் எனக்கும் உள்ள உறவு அண்ணன் - தம்பி உறவு போன்றது. குகனுக்கு இருக்கும் சோகத்தில் எனக்கும் பங்கு இருப்பதாக நான் உரிமை கொண்டாடுகிறேன். நான் தனி மரம் அல்ல, AVM என்ற பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி இன்று வளர்ந்து வந்திருக்கிறேன். இந்த தோப்பில் பல ஆசான்கள் எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் ஒருவனின் அஞ்சலி இது" என்று பேசியுள்ளார்.
- தொழிலதிபர் வீட்டு திருமண விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டார்.
- பான் மசாலா விளம்பரத்தில் ஷாருக்கான், "நாக்கிலே குங்குமப்பூ" என்று கூறுவார்.
டெல்லியில் நடைபெற்ற தொழிலதிபர் வீட்டு திருமண விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டார்.
அப்போது ஷாருக்கானிடம், பிரபல பான் மசாலா விளம்பரத்தில் வரும், "நாக்கிலே குங்குமப்பூ" (Zubaan Kesari) என்ற டயலாக்கை கூறுமாறு வற்புறுத்தி கேட்டதால் சிரிப்பலை எழுந்தது.
இதையடுத்து பேசிய ஷாருக்கான்,"இந்த தொழிலதிபர்களிடம் நீங்கள் ஒருமுறை பிசினஸ் செய்தால், அவர்கள் உங்களை ஒருபோதும் விட மாட்டார்கள், அதிலும் குட்கா காரர்கள் அதிக பணம் தருகிறார்கள். நான் அதைச் செய்ய பணம் வாங்குகிறேன். தயவுசெய்து இதை உன் அப்பாவிடம் சொல்லுங்கள். நல்ல விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும். நான் இங்கே நின்றுகொண்டு நாக்கிலே குங்குமப்பூ என்பதை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அது தவறு, அது தடைசெய்யப்பட்டுள்ளது. நீ என் ரசிகனா அல்லது விமலின் (பான் மசாலா நிறுவனம்) ரசிகனா?" என தனேக்கே உரிய பாணியில் கிண்டல் அடித்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை இப்படி சங்கப்படுத்துவது தவறு என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
- வா வாத்தியார் படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது..
- இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.
'மெய்யழகன்' படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசரும், பாடல்களும் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தன. இப்படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தன்னிடம் வாங்கிய கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.21.78 கோடி பணத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- உயிரிழந்த சரவணனின் உடல் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
- ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
இன்று காலை வயது மூப்பின் காரணமாக பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஏ.வி.எம். சரவணன் உடலுக்குநடிகர்கள் சிவக்குமார் மற்றும் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவக்குமார், "என்னுடைய சொந்த பெயர் பழனிசாமி. அதை சிவகுமார் என மாற்றியது சரவணன் சார் தான். இதன் காரணமாக தான் எனது சூர்யாவுக்கு நான் சரவணன் என பெயர் வைத்தேன்" என்று தெரிவித்தார்.
- அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
- மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் கலந்துகொள்ளவுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
அவ்வகையில் மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார்.
இந்நிலையில் மலேசியாவில் அஜித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட ரசிகை ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், முதல்ல நான் போட்டோ எடுக்க முயற்சி பண்ணப்போ அஜித் சார் என்ன திட்டிட்டாரு. ஆனா அதுக்கு அப்புறம் அவரே கூப்பிட்டு ஒரு செல்பி எடுத்து கொடுத்தாரு. என் வாழ்நாள் கனவு நனவாகிடுச்சி. அந்த ஒரு நொடி எனக்கு உலகத்தையே மறக்க வச்சிருச்சு'' என்று ஆனந்த கண்ணீருடன் மலேசிய ரசிகை பேசியுள்ளார்.








