என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    பரபரப்பாக செயல்பட்டு பாராட்டு மழையில் நனையும் நாள். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை உண்டு.

    ரிஷபம்

    சந்தோஷங்களைச் சந்திக்கும் நாள். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேரலாம். வீட்டைப் பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

    மிதுனம்

    வளர்ச்சி கூடும் நாள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

    கடகம்

    நிதி நிலை உயரும் நாள். நேசம் மிக்கவர்களின் பாசமழையில் நனைவீர்கள். வீடு மாற்றத் தகவல் இனிமை தரும். உத்தியோகத்தில் இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.

    சிம்மம்

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    கன்னி

    உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அக்கம், பக்கத்து வீட்டாரின் பகை மாறும். கடன் சுமை குறைய எடுத்த புது முயற்சி பலன் தரும்.

    துலாம்

    மகிழ்ச்சி கூடும் நாள். நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

    விருச்சிகம்

    மகிழ்ச்சி கூடும் நாள். வருமானம் உயரும். உறவினர்களின் சந்திப்பு உண்டு. வீட்டை சீரமைப்பதில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.

    தனுசு

    சங்கடங்களை சந்திக்கும் நாள். திட்டமிட்ட சில வேலைகளை மாற்றியமைக்க நேரிடும். நண்பர்கள் வழியிலும் விரயங்கள் உண்டு.

    மகரம்

    நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியைமத்துக் கொள்வீர்கள். பால்ய நண்பர்கள் பக்கபலமாக இருப்பர்.

    கும்பம்

    வளர்ச்சி கூடும் நாள். நெருக்கடி நிலை அகலும். பிள்ளைகள் பொறுப்போடு செயல்படுவது கண்டு பெருமைப்படுவீர்கள். பணியில் இருந்த தாமதம் அகலும்.

    மீனம்

    விருப்பங்கள் நிறைவேற விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வருமானத்தை விட செலவுகளே அதிகரிக்கும். தொழில் போட்டிகள் அதிகரிக்கும்.

    • மேஷம் சாதிக்கும் எண்ணம் மேலோங்கும் வாரம்.
    • ரிஷபம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும் வாரம்.

    மேஷம்

    சாதிக்கும் எண்ணம் மேலோங்கும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி செவ்வாய்க்கும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுக்கும் பாக்யாதிபதி குருவின் சம சப்தம பார்வை உள்ளது. இதனால் திரிகோணங்கள் பலம் பெறுகிறது. குடும்ப பிரச்சினைகள் அகலும். மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள், துயரங்கள், சங்கடங்கள் விலகும். உங்களை ஏளனமாக அலட்சியமாக நினைத்தவர்கள் திரும்பி பார்க்கும் வகையில் உங்களுடைய வளர்ச்சி கூட போகிறது.தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும். சுப பலன்கள் அதிகரிக்கும். கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனசில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.பெண்களுக்கு பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும்.திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வரும். உடல் நலம் மிகச் சிறப்பாக இருக்கும். சஷ்டி திதியில் முருகனை வழிபடவும்.

    ரிஷபம்

    குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் நின்று தனம் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவை பார்க்கிறார். குரு ராசி அதிபதியை பார்ப்பதால் வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திரம் உருவாகும். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.வேலை பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். விலை உயர்ந்த நவீன ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண தடை விலகி விவாகம் நடைபெறும். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். சமூக ஆர்வ லர்களுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட சுப பலன்கள் அதிகரிக்கும்.

    மிதுனம்

    தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் வாரம்.ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெறுகிறார். எடுக்கும் முயற்சியில் தடையில்லாத வெற்றி கிட்டும். அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும். பண வரவு பல வழிகளில் வரும். கோட்சார கிரகங்கள் அனைத்தும் மிதுன ராசியினருக்கு சாதகமாக உள்ளது. இதனால் ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். தாய், தந்தையரின் விருப்பங்க ளையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்று வீர்கள். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும். உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். பெண்களுக்கு தாய்வழி ஆதரவும், சீதனமும் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். மூத்த சகோதரம், சித்தப்பா மூலம் பொருள் உதவி கிடைக்கும். தாய் அல்லது தந்தையின் அரசாங்க வாரிசு வேலை கிடைக்கும்.சுவாமி ஐயப்பனை ஆத்மார்த்தமாக வழிபடவும்.

    கடகம்

    மனக்கவலைகள் குறையும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியனுக்கு குருவின் சம சப்தம பார்வை உள்ளது. இது கடக ராசிக்கு முன்னேற்றத்தை தரக்கூடிய யோகமான காலமாகும்.குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். தொழில் முயற்சிகள் நிறைவேறும். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் முன்னேற்றமடையும்.பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவும், பணப்புழக்கமும் உண்டாகும். கைநிறைய பணம் புரள்வதால் மனதில் நிறைவும் நெகிழ்ச்சியும் உண்டாகும். திருமணத்தடை விலகும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். மறுமணத்திற்கும் வரன் கிடைக்கும். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள்.கூட்டுத் தொழிலில் பலன் உண்டு. திண்டாட்டம் மாறி கொண்டாட்டம் உலாவும்.ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.வேலை மாற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு வேலைப் பளுவும் அலைச்சலும் அதிகரிக்கும்.ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

    சிம்மம்

    நெருக்கடிகள் விலகும் வாரம். ராசி அதிபதி சூரியன் குரு மற்றும் சனி பார்வையில் உள்ளார். தடை, தாமதங்கள் விலகும். மனச் சங்கடங்கள் அகலும்.ஞாபக சக்தி அதிகரிக்கும். தைரியமும் தெம்பும் குடிபுகும். நினைப்பது எல்லாம் நடக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்ப உறவுகளின் அனுசரனையால் அனைத்து பிரச்சினைகளும் கானல் நீராக மறையும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். சிலருக்கு நிலம், வீடு போன்ற சொத்துச் சேர்க்கை உண்டாகும்.சிலரது காதல் பிரிவினையில் முடியும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட இடையூறுகள் குறையும்.அதிக முதலீடு கொண்ட செயல்களை தற்காலி கமாக ஒத்தி வைப்பது நல்லது.வேலையில் பதவி உயர்வுகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. கை,கால், மூட்டு வலியால் சிலருக்கு சிறு அறுவை சிகிச்சைக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீகம் தொடர்பான விசயங்கள் விரைவில் முடிவிற்கு வரும். குடும்ப முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்து மகிழ்வீர்கள்.சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள். முன் கோபத்தை குறைப்பது நல்லது.வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடவும்.

    கன்னி

    பொறுப்புகள், கடமைகள் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார்.பிறரை நம்பி களத்தில் இறங்கி ஏமாற்றம் அடைந்த நீங்கள் சுய நம்பிக்கையில் இழந்தததை ஈடுகட்டுவீர்கள். இது வரை உங்களைத் துரத்திய அவமானம், நஷ்டம், கவலைகள் விலகும். எதிர்காலத்தில் உங்கள் பெயர் பிரகாசிக்குமளவு புகழ், பெருமை, கவுரவம் சேரும். ஜனன கால ஜாதரீதியாக சாதகமான தசாபுக்திகள் நடந்தால் நன்மையின் அளவை அளவிட முடியாத வளர்ச்சி உண்டு. கண்டகச் சனி பற்றிய பயம் விலகும். பொருளாதார பற்றாக்குறை அகலும். வர வேண்டிய கடன் வசூலாகும். கொடுக்க வேண்டிய கடனை திரும்ப செலுத்துவீர்கள்.பெண்களுக்கு பொருளாதாரத்தில் தன் நிறைவு கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் மனம் மகிழும் சம்பவம் நடக்கும். தொழில் உத்தியோகம் நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். அரசு வேலைக்கான முயற்சி கைகூடும்.புத ஆதித்ய யோகத்தால் மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். பள்ளி கல்லூரிகள் மூலம் கல்வி சம்பந்தமான சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உள்ளது.தினமும் திருகோளாறு பதிகம் படிக்கவும்.

    துலாம்

    தெய்வு அனுகூலமும், அதிர்ஷ்டமும் வழி நடத்தும் வாரம். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சுக்கிரனுக்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது.புகழ், அந்தஸ்து, ஆளுமை அதிகரிக்கும். இனம் புரியாத கவலைகள் குறையும். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் எதிர் நீச்சல் போட்டு இழந்ததை மீட்பீர்கள். நண்பர்கள், சகோதரர்களால் கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு சுப தேவைக்காக கடன் வாங்கும் சூழல் உண்டாகும். சொத்து வாங்கும் முயற்சிகள் சித்திக்கும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். திருமண வாய்ப்புகள் தேடி வரும். ஓயாத உழைப்பால் அசதி மன உளைச்சல் ஏற்படும். விரும்பிய வேலையில் சேர சிபாரிசுக்கு அலைய நேரும். ஆரோக்கியம் சிறக்கும். கொடுத்து வாக்குறுதியை காப்பாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள்.சங்கடங்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் மாற்றும் வல்லமை இறைபக்திக்கு உண்டு என்பதால் சரபேஸ்வரரை வழிபட்டு நலம் பெறவும்.

    விருச்சிகம்

    ஏற்றமான பலன்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் குரு மற்றும் சனியின் பார்வையில் சூரியன் சுக்கிரன் புதனுடன் இணைந்துள்ளார்.கடன் தொல்லை அகலும்.போதிய தன வரவால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். சிலரின் இளைய சகோதரம் உதவிக்கரம் நீட்டுவார்கள். புதிய தொழில் முயற்சிக்கு தேவை யான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். முக்கியமான தேவைகள் நிறைவேறும். பார்த்துச் சென்ற வரனின் முடிவிற்காக காத்து இருப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.திருமண முயற்சியை ஒரு வாரம் ஒத்தி வைக்கலாம்.வீட்டு வாடகை உயரும். சொத்தை அடமானம் வைத்து சில்லறைக் கடனை அடைப்பீர்கள். கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் உண்டாகும். 4.1.2026 அன்று காலை 9.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வாக்கால் உறவுகளிடம் மன சங்கடம் உண்டாகும். சகோதர, சகோதரிகளிடம் புரிதல் குறையும்.வெளி உணவுகளைத் தவிர்க்கவும். நெருக்கமானவர்களிடம் இருந்து சற்று விலகி இருக்கவும். தினமும் சிவபுராணம் படிக்கவும்.

    தனுசு

    முன்னோர்களின் நல்லாசிகள் நிறைந்த வாரம். பாக்கிய ஸ்தான அதிபதி சூரியன் ராசியில் சஞ்சரிப்பதால் தந்தையின் மூலம் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். தந்தையின் ஆசியும் ஆஸ்தியும் கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை பலன் தரும். வெளிநாட்டு பயணம் சாதகமாகும். புதிய வாய்ப்புகளால் லாபம் உண்டாகும்.நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவுகளிடம் நிலவிய கவுரவப் போராட்டம் விலகி ஒற்றுமை பலப்படும்.வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் மறுமுதலீடாக மாறும். தொழிலில், உத்தியோகத்தில் நிலவிய பிரச்சினைகள் குறையும். திருமணத் தடை அகலும். சொந்த இன, உறவுகளில் வரன் அமையும்.4.1.2026 அன்று காலை 9.43க்கு ஆரம்பித்து 6.1.2026 அன்று பகல் 12.17 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் சில சங்கடங்கள் உண்டாகலாம். எதிலும் சிறப்பாக செயல்பட முடியாது. உடன் இருப்ப வர்களால் மனக்குழப்பம், பணியில் சோர்வு ஏற்படும். சனிக்கிழமைகளில் முன்னோர்களை வழிபட குடும்பத்தில் நிம்மதி கூடும்.

    மகரம்

    நிம்மதியான வாரம்.ராசி அதிபதி சனி வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மறைமுக லாபம் கிடைக்கும். உணவுத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில், பங்கு வர்த்தகம், மார்க்கெட்டிங் போன்ற பணியில் இருப்பவர்களின் வருமானம் இரட்டிப்பாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம், திருப்பம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் இந்த வாரம் கிடைக்கக்கூடும். பிள்ளைகளின் திருமண முயற்சி சாதகமாகும். குடும்பத்தில் இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும்.பெண்களுக்கு குடும்பப் பணிச்சுமையால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். உயர்கல்வி முயற்சி சாதகமாகும். பெண்கள் கணவரின் உண்மையான அன்பை உணர்வீர்கள். 6.1.2026 அன்று பகல் 12.17 முதல் 8.1.2026 அன்று மாலை 6.39 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சால், முன் கோபத்தால் நல்ல வாய்ப்புகள் தள்ளிப்போகும்.பேச்சைக் குறைப்பது நல்லது. வேலைப்பளு மிகுதியாகும். மன அமைதி குறையும். வேலை ஆட்களை அனுசரித்துச் செல்லவும். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை செய்வது வழிபடவும்.

    கும்பம்

    மகிழ்ச்சிகரமான வாரம். ஏழரைச் சனியின் தாக்கத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சனி உங்களின் ராசி அதிபதி என்பதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும்.கூலித் தொழிலாளிகளுக்கு தொழில் நெருக்கடி விரைவில் சீராகும். லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்ரன் சேர்க்கை இருப்பதால் பணக் கஷ்டம்,கடன் பாதிப்பு இருக்காது.சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். சிலருக்கு அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை கிடைக்கும்.கடந்த கால கடன்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் சீராகும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று நடப்பார்கள். 8.1.2026 அன்று மாலை 6.39க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள். பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும். முன் கோபத்தை குறைப்பது நல்லது.வியாழக்கிழமை குபேர லட்சுமியை மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவும்.

    மீனம்

    திட்டம் தீட்டி வெற்றி பெற வேண்டிய வாரம். ஜென்மச் சனியின் காலம் என்பதால் பண விசயத்தில் யாரையும் நம்பக்க கூடாது. திட்டமிட்டு செயல்பட்டால் விரயத்தை சுப செலவாக மாற்ற முடியும். வீடு, வாகனம், பிள்ளைகளின் திருமணம், படிப்பு, நகை வாங்குவது என விரயத்தை சுப செலவாக முதலீடாக மாற்றுவது நல்லது.உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊர் விட்டு ஊர் மாற நேரும். சிலர் வெளி மாநிலம் , வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். சிலருக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். தாய் வழிச் சொத்து விஷயத்தில் உடன் பிறந்தவர்களுடன் சிறு சலசலப்பு ஏற்படும். பாகப்பிரிவினை பேச்சுவார்த்தை பஞ்சாயத்து வரை சென்று சாதகமாகும். ஆரோக்கிய குறைபாட்டிற்கு மாற்றுமுறை வைத்தியத்தை நாடுவீர்கள். வார இறுதியில் வேலைப்பளு அதிகரிக்கும். ஆன்மீக பயணங்கள் அதிகமாக மேற்கொள்வீர்கள். வேலையில் பணி நிரந்தரமாகும். திருமண முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது நல்லது.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை.
    • ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் ஊஞ்சலில் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-20 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பிரதமை பிற்பகல் 2.53 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம் : புனர்பூசம் மாலை 5.49 மணி வரை பிறகு பூசம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    காஞ்சிபுரம், சமயபுரம், தஞ்சை புன்னைநல்லூர் உள்பட அம்மன் கோவில்களில் சுவாமிக்கு அபிஷேகம்

    சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை. சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் முத்துப் பல்லக்கில் புறப்பாடு கண்டருளல். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் ராஜாங்க சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், மதுரை கூடலழகர் கோவில்களில் சிறப்பு அலங்கார சேவை. கீழ்த் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் ஸ்ரீ அனுமனுக்குத் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீஅங்காரகருக்கும் ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு. தேவக்கோட்டை சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் அபிஷேகம், ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உழைப்பு

    ரிஷபம்-பாராட்டு

    மிதுனம்-விவேகம்

    கடகம்-தனம்

    சிம்மம்-மகிழ்ச்சி

    கன்னி-நற்செயல்

    துலாம்- பாசம்

    விருச்சிகம்-பண்பு

    தனுசு- சுகம்

    மகரம்-பெருமை

    கும்பம்-சுபம்

    மீனம்-பயணம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    முன்னேற்றம் கூடும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. நேற்று பாதியில் நின்ற பணிகள் இன்று மீதியும் தொடரும்.

    ரிஷபம்

    யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    மிதுனம்

    குறைகள் அகலும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொழில் வியாபாரத்தில் இழந்த லாபத்தைப் பெறுவீர்கள்.

    கடகம்

    நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளால் பிரச்சனைகள் உண்டு.

    சிம்மம்

    குறை சொல்லியவர்கள் பாராட்டும் நாள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்துசேரும். வீடு மற்றும் வாகன வகையில் பராமரிப்புச் செலவு கூடும்.

    கன்னி

    கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும்.

    துலாம்

    நட்பால் நன்மை கிட்டும் நாள். அலைபேசி வழியில் ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். அயல்நாட்டு முயற்சி கைகூடும்.

    விருச்சிகம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். குடும்பச் சுமை கூடும். விரயங்கள் அதிகரிக்கும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம்.

    தனுசு

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். எந்தக் காரியத்தையும் செய்வதில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.

    மகரம்

    பெற்றோர் வழியில் ஆதரவு கூடும் நாள். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.

    கும்பம்

    பஞ்சாயத்துகள் முடிவிற்கு வரும் நாள். பணவரவு திருப்தி தரும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மீனம்

    திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நாள். உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம்.

    • பாத தரிசனம் கண்டால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெறலாம் என்பது ஐதீகம்.
    • பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சியும் நடந்தது.

    திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாக திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கிற தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாக விளங்குகிறது.

    இத்தகைய பல்வேறு பெருமை வாய்ந்த கோவிலில் ஆண்டிற்கு 2 முறை தியாகராஜர் சாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெறும். பாத தரிசனம் கண்டால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெறலாம் என்பது ஐதீகம்.

    அதன்படி இன்று திருவாதிரை திருவிழாயொட்டி பாத தரிசன விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தியாகராஜா சாமிக்கு திருவாதிரை திருவிழா மகா அபிஷேகம் நடந்தது. அதனைதொடர்ந்து பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சியும் நடந்தது.

     

    பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பாத தரிசனம் செய்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி தலைமையில் பணியாளர்கள் செய்து இருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
    • அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம் விழா நடைபெற்றது.

    ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று அதிகாலை சிவகாமசுந்தரி தாயார் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் அலங்கார ரூபத்தில் எழுந்தருளிய சிவகாமசுந்தரி தாயார் சமேத நடராஜருக்கு அண்ணாமலை உச்சியில் 11 நாட்கள் எரிந்த மகா தீப கொப்பரையில் இருந்து எடுக்கப்பட்ட மகா தீப மை சாத்தப்பட்டது.

    பின்னர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி வந்த நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

    ஆங்கில புத்தாண்டின் முதல் பவுர்ணமி என்பதால், ஆருத்ரா தரிசனம் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கார்த்திகை தீப திருவிழாவிற்கு நெய் காணிக்கை கொடுத்த பக்தர்களுக்கு 2 ஆயிரத்து 668 உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட மகா தீப கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட மகா தீப மை விநியோகம் தொடங்கியது. சில தினங்களில் மகா தீப மை முழுமையாக வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    • சிவ கோஷத்துடன் கைலாய வாத்தியங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள், ஏககால லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலி சொர்ணாபிஷேகம் நடைபெற்றது.

    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய 2 திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதம் 25-ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையடுத்து முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா நேற்று அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் சித் சபையில் இருந்து புறப்பட்டு மேளதாளம் முழங்க கீழ ரத வீதியில் உள்ள தேர்நிலைக்கு வந்தடைந்தது. பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேரில் வீற்றிருக்க தேர் நிலையான கீழ ரத வீதியில் இருந்து சிவ கோஷத்துடன் கைலாய வாத்தியங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி கொண்டு செல்லப்பட்டு அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள், ஏககால லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலி சொர்ணாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. அதனைத்தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் மாலை 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடக்கிறது.

    நாளை (4-ந் தேதி) பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவும், நாளைமறுநாள் (5-ந் தேதி) ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.

    • குச்சனூர் ஸ்ரீ சனி பகவான் சிறப்பு திருமஞ்சன சேவை.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் மண்டபம் எழுந்தருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-19 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பவுர்ணமி மாலை 4.42 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம் : திருவாதிரை இரவு 6.56 மணி வரை பிறகு புனர்பூசம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    பவுணர்மி, ஆருத்ரா தரிசனம், ஸ்ரீவரதராஜ மூலவருக்கு அபிஷேகம்

    இன்று பவுர்ணமி. ஆருத்ரா தரிசனம் (நடராஜர் அபிஷேகம்), குச்சனூர் ஸ்ரீ சனி பகவான் சிறப்பு திருமஞ்சன சேவை. நயினார்கோவில் அன்னை சவுந்தர நாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேக வல்லியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார சிறப்பு திருமஞ்சன சேவை.

    திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீபரிமள ரங்கராஜர் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் அலங்காரம், திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-நிம்மதி

    மிதுனம்-பணிவு

    கடகம்-தெளிவு

    சிம்மம்-இன்பம்

    கன்னி-வாழ்வு

    துலாம்- போட்டி

    விருச்சிகம்-ஆக்கம்

    தனுசு- பரிசு

    மகரம்-பெருமை

    கும்பம்-ஆதாயம்

    மீனம்-செலவு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடலாம். நினைத்த காரியமொன்று நிறைவேறும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

    ரிஷபம்

    தொழிலில் லாபம் அதிகரிக்கும் நாள். தொலைதூரத்திலிருந்து சந்தோஷமான தகவல் வந்து சேரும். பொதுவாழ்வில் புகழ்கூடும்.

    மிதுனம்

    ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளம் மகிழும் நாள். தொல்லை கொடுத்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர். பம்பரமாகச் சுழன்று பணிபுரிவீர்கள்.

    கடகம்

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் கருதி புது முயற்சி ஒன்றில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    சிம்மம்

    சச்சரவுகள் விலகி சாதனை படைக்கும் நாள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.

    கன்னி

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். வாழ்க்கைத் துணைவழியே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    துலாம்

    நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வரலாம். புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

    விருச்சிகம்

    நல்லது நடைபெற நடராஜரை வழிபட வேண்டிய நாள். விரயங்கள் உண்டு. மனக்குழப்பம் அதிகரிக்கும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

    தனுசு

    அடிப்படை வசதிகள் பெருகும் நாள். எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.

    மகரம்

    கனிவான பேச்சுகளால் காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் நாள். சேமிப்பில் அக்கறை கூடும். உடன்பிறப்புகள் ஆதரவுக் கரம் நீட்டுவர்.

    கும்பம்

    இனிய நண்பர்களின் சந்திப்பால் இதயம் மகிழும் நாள். இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறும். உடன் இருப்பவர்கள் உங்கள் தொழிலுக்கு உறுதுணை புரிவர்.

    மீனம்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. திடீர் பயணம் தித்திக்க வைக்கும்.

    • பிறவா வரம் வேண்டும் என்பவர்கள் தான் நம்மில் ஏராளம்.
    • உங்கள் மனசாட்சிப்படி நீங்கள் நடப்பவராக இருந்தால் அடுத்த பிறவி உண்டா?

    மனிதராக பிறந்தவர்கள் அனைவரும் ஏழு பிறவிகளை எடுப்பார்கள் என்றும், கர்மம் தீரும் வரை பிறப்பு என்பது நிகழும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகிறது.

    ஆனால், ஒரு பிறவிலேயே நாம் படாதபாடு படுகிறோம். இக்காலத்தில் யாரிடமாவது உனக்கு இன்னொரு பிறவி வேண்டுமா என்று கேட்டால் போதும்டா சாமி..! ஆளவிடுங்க என்று தெரித்து ஓடும் சூழல்தான் இருக்கிறது.

    அதனால், மீண்டும் எனக்கு மனிதனாக பிறக்கவே வேண்டாம்.. பிறவா வரம் வேண்டும் என்பவர்கள் தான் நம்மில் ஏராளம்.

    இப்படி பிறவா நிலையை வேண்டுபவர்கள், எந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

    முற்பிறவியில் செய்த பாவங்களுக்கான தண்டனைகளை அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்ந்து அனுபவித்து கொண்டே இருக்க வேண்டும். அந்த பிறவியிலும் பாவம் செய்தால், மீண்டும் பிறவி எடுக்க வேண்டும், இது தொடர்கதை ஆகும்..

    எப்பிறவியில் பாவம் செய்யாமல், நேர்வழியில் பக்தி மார்க்கத்துடன் இணைந்து இருக்கிறானோ, அப்பிறவியில் அவனுடைய பிறவி முடிவடைகிறது.

    இறைவனின் விழிகளில் இருந்து நம்மால் தப்பிக்க முடியாது. நான் என்ன தவறு செய்தேன்? எனக்கு ஏன் இந்த பிரச்சனை என்று கேட்க முடியுமா? அப்படி நீங்கள் கேட்பவராக இருந்தால், உங்கள் மனசாட்சிப்படி நீங்கள் நடப்பவராக இருந்தால் அடுத்த பிறவி உங்களுக்கு கிடையாது.

    மறுபிறவி வேண்டாம் என்று நினைப்பவர்கள், 108 வில்வ இலைகளில், "ஓம் நமச்சிவாய" என்னும் ஆத்ம சக்தி வாய்ந்த சிவ மந்திரத்தை எழுதி, லிங்கத்திற்கு 108 முறை அர்ச்சனை செய்து வர வேண்டும்.

    கண் குளிர சிவபெருமானை தரிசித்து, மனதார "இப்பிறவி போதும், இனி பிறவா நிலை வேண்டும்" என்று பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

    48 பிரதோஷங்கள் காளை மாட்டிற்கு அருகம்புல் தானம் செய்பவர்களுக்கு, பிறவா நிலை வரும். இப்பரிகாரங்களை செய்து வந்தால், அப்பிறவியிலேயே அவர்களுக்கு மோட்சம் பக்தி மூலமாக உண்டாகி, மறுபிறவி என்பதே கிடையாது என்பது ஐதீகம்.

    • இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதம் 25-ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பெண் பக்தர்கள் நடராஜர் தேர் முன்பு கோலமிட்டும், மேளதாளங்களுக்கு நடனமாடியும் நடராஜரை வரவேற்றனர்.

    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய 2 திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதம் 25-ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையடுத்து முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா இன்று அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் சித் சபையில் இருந்து புறப்பட்டு மேளதாளம் முழங்க கீழ ரத வீதியில் உள்ள தேர்நிலைக்கு வந்தடைந்தது. பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேரில் வீற்றிருக்க தேர் நிலையான கீழ ரத வீதியில் இருந்து சிவ கோஷத்துடன் கைலாய வாத்தியங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    தேரானது கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக மீண்டும் இன்று மாலை 6 மணி அளவில் தேர் நிலையான கீழ ரத வீதியை வந்தடையும். தேர் திருவிழாவை முன்னிட்டு தில்லை திருமுறை கழகம் சார்பில் ஏராளமான பக்தர்கள் தேவாரம் திருவாசகம் பாடி தேர் முன் சென்றனர். பெண் பக்தர்கள் நடராஜர் தேர் முன்பு கோலமிட்டும், மேளதாளங்களுக்கு நடனமாடியும் நடராஜரை வரவேற்றனர். தேர் நிலையில் இருந்து இரவு 8 மணிக்கு மேல் ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி கொண்டு செல்லப்பட்டு அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள், ஏககால லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலி சொர்ணாபிஷேகம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து நாளை (3-ந் தேதி) அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், மதியம் பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் மாலை 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடக்கிறது.

    நாளைமறுநாள் (4-ந் தேதி) பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவும், 5-ந் தேதி ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.

    • அக்னி வடிவமான சிவபெருமானை குளிர்ச்சி மிகுந்த மார்கழி மாதத்தில் திருவாதிரை நாளில் ஆறு விதமான அபிஷேகம் செய்து குளிர்விக்கிறார்கள்.
    • சிவன் கோவில்களுக்கு சென்று, அங்குள்ள நடராஜரையும், சிவகாமி அம்மையாரையும் தரிசிக்க வேண்டும்.

    பல சிறப்புகளை உடைய மார்கழி, இறை வழிபாட்டுக்கு மிகவும் உதந்த மாதமாகும். பொதுவாக, மார்கழி மாதம் என்றாலே பெருமாள் வழிபாட்டுக்குரிய மாதமாக கருதுவார்கள். ஆனால் பெருமாளுக்கு மட்டுமின்றி சிவபெருமானுக்கும் உகந்த மாதமாக மார்கழி மாதம் உள்ளது. மார்கழி மாதத்தில் பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுவதை போல, சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடத்தப்படுகிறது.

    27 நட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டும்தான் 'திரு' என்ற சிறப்பு அடைமொழி வழங்கப்பட்டுள்ளன. ஒன்று திருமாலுக்கு உகந்த 'திருவோணம்' நட்சத்திரம். மற்றொன்று சிவபெருமானுக்கு உகந்த 'திருவாதிரை' நட்சத்திரம். இந்த சிறப்புமிக்க திருவாதிரை நாளில் தான் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

    அக்னி வடிவமான சிவபெருமானை குளிர்ச்சி மிகுந்த மார்கழி மாதத்தில் திருவாதிரை நாளில் ஆறு விதமான அபிஷேகம் செய்து குளிர்விக்கிறார்கள். இந்த அபிஷேகத்தை கண் குளிர காண்பதே 'ஆருத்ரா தரிசனம்' ஆகும். இதனை 'மார்கழி திருவாதிரை' என்றும் சொல்வார்கள்.

    ஒரு சமயம் மகாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்தார். கண்களை மூடியபடி இருந்த திருமால் திடீரென்று, ''ஆஹா! அற்புதமான காட்சி'' என்று மனமுருகி சத்தம் போட்டார். இதைக் கேட்ட ஆதிசேஷனும், மகாலட்சுமி தாயாரும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர். கண் விழித்து பார்த்த மகாவிஷ்ணுவிடம், ''தங்களின் பரவச நிலைக்கு காரணம் என்ன'' என்று ஆதிசேஷனும், மகாலட்சுமியும் கேட்டனர்.

    அதற்கு, சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை என்னுடைய ஞானக் கண்ணால் பார்த்தேன். அதைக் கண்டு மெய்சிலிர்த்ததால்தான் அவ்வாறு கூறினேன் என்றார் மகாவிஷ்ணு. மேலும், அவர் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றி சொல்ல, ஆதிசேஷனுக்கும் சிவனின் ஆனந்தத் தாண்டவத்தை காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. ஆதிசேஷனின் மன ஓட்டத்தை புரிந்துகொண்ட மகாவிஷ்ணு, ''ஆதிசேஷா! உன் மனம் நினைப்பதை நான் அறிவேன். நீயும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை பார்க்க வேண்டுமானால், பூலோகத்தில் பிறந்து தவம் இயற்ற வேண்டும். அப்போது உனக்கும் அந்த அற்புத ஆனந்தத் தாண்டவ தரிசனம் கிடைக்கும்'' என்றார்.

    அதன்படி ஆதிசேஷனும் பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார். அவரது உடல் இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே பாம்புத் தோற்றமும் கொண்டதாக இருந்தது. பதஞ்சலி முனிவர் பல காலம் பூமியில் தவம் இருந்தார். அதன் பயனாக, ஒருநாள் திருவாதிரை தினத்தன்று, சிதம்பரத்தில் சிவபெருமான் தன்னுடைய ஆனந்தத் தாண்டவ திருக்காட்சியை பதஞ்சலி முனிவருக்குக் காட்டி அருளினார். அந்த தினமே ஆருத்ரா தரிசனம் ஆகும். சிவபெருமானின் அற்புத நடன காட்சியை கண்ட பதஞ்சலி முனிவர், ''இறைவா, இந்த திருக்காட்சியை பூலோக மக்களுக்கும் காட்டி அருள வேண்டும்'' என வேண்டினார். அதன்படியே மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் நடத்தப்படுகிறது.

    திருவாதிரை நோன்பு

    தேவர்களின் அதிகாலைப் பொழுதாக கருதப்படும் மார்கழி மாதத்தை 'பிரம்ம முகூர்த்த நேரம்' என்றும் சொல்வார்கள். இந்த மாதத்தில் வரும் பவுர்ணமியுடன் கூடிய திருவாதிரை நாளில்தான் 'திருவாதிரை நோன்பு' கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, சிவ நாமத்தை உச்சரித்து உடலில் திருநீறு பூச வேண்டும். காலையில் உணவு அருந்துவதை தவிர்க்கவும்.

    அருகில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று, அங்குள்ள நடராஜரையும், சிவகாமி அம்மையாரையும் தரிசிக்க வேண்டும். ஆலயத்தில் நடைபெறும் தாண்டவ தீபாராதனையை கண்டு வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் சிவபெருமானுக்குரிய பாடல்கள், சிவபுராணம், தேவாரம், திருவாசக பாடல்கள் போன்றவற்றை பாராயணம் செய்து வேண்டி கொள்ளுங்கள். பின்பு இரவில் எளிமையான உணவை உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

    ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படும் இந்த திருவாதிரை நோன்பை, மாதந்தோறும் வரும் திருவாதிரை நட்சத்திர நாளிலும் மேற்கொள்ளலாம். தொடர்ச்சியாக ஒரு வருடம் திருவாதிரை நோன்பு இருப்பவர்களுக்கு இனிமையான வாழ்க்கை அமையும், கயிலாயத்தில் வாழும் பேறும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் நல்ல கணவன் அமைவர், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும், பாவங்கள் நீங்கும், அறிவு, ஆற்றல் பெருகும். மேலும் எண்ணற்ற பலன்களை பெறலாம்.

    ×