ஜெயக்குமார் போல மேலும் அமைச்சர்கள் இருக்கிறார்கள்- வெற்றிவேல்

ஜெயக்குமார் போல் பல அமைச்சர்களும் இருக்கிறார்கள் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #Vetrivel #Jayakumar
ஜெயக்குமார் போல மேலும் அமைச்சர்கள் இருக்கிறார்கள்- வெற்றிவேல்
Published on

சென்னை:

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் அடையாறில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அமைச்சர் ஜெயக்குமார் வி‌ஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீர்வு காணவே ஆடியோ வெளியானது. இதை நாங்கள் வெளியிடவில்லை. பிறந்த குழந்தையின் சான்றிதழை வைத்து முகவரியை அரசுதான் கண்டுபிடிக்க வேண்டும். எனக்கு வந்த தகவலின் அடிப்படையின் நன்கு ஆராய்ந்த பிறகே ஆடியோ வெளியிடப்பட்டதாக அறிகிறேன். அமைச்சர் ஜெயக்குமார் தனது தவறுகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.

மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் போல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து புகாரை சந்திக்க வேண்டும். இதில் கவர்னர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயக்குமார் அமைச்சர் பதவியில் இருந்து விலகினால் சம்பந்தப்பட்டவர் விளக்கம் அளிப்பார். ஜெயக்குமார் போல் பல அமைச்சர்களும் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Vetrivel #Jayakumar

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com