திமுகவை பின்னுக்கு தள்ளி விருதுநகர் தொகுதியை கைப்பற்றுமா அதிமுக? வீசும் ஆதரவு அலை

விருதுநகர் தொகுதியில் அதிமுகவிற்கு அதிக ஆதரவு உள்ளது.
திமுகவை பின்னுக்கு தள்ளி விருதுநகர் தொகுதியை கைப்பற்றுமா அதிமுக? வீசும் ஆதரவு அலை
Published on

தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு, மே.4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணிக்குச் சாதகமான சூழல் இருப்பதாகப் பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதிமுக தலைமையிலான கூட்டணி பிரதான எதிர்க்கட்சியாகத் தனது செல்வாக்கை நிரூபிக்கப் போராடி வருகிறது.

இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளும் கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது ஒரு பலமுனைப் போட்டியை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக மக்களிடன் கருத்துக் கேட்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் விருதுநகர் பகுதி மக்களிடையே பேசியதில் அங்கு அதிமுகவிற்கு அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் திமுக உள்ளது. இருப்பினும் தேர்தல் முடிவுகள் மாறுபடலாம். தற்போது திமுகவைச் சேர்ந்த ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் சட்டமன்ற உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com