அரசியலுக்கு வராத ரஜினியை விமர்சிப்பது தேவையற்றது- தம்பிதுரை

அரசியலுக்கு வராத ரஜினியை குறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது என்று கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #ADMK #ThambiDurai #Rajinikanth
அரசியலுக்கு வராத ரஜினியை விமர்சிப்பது தேவையற்றது- தம்பிதுரை
Published on

கரூர் தென்னிலையில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரசை தனிமைப்படுத்த அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது. இப்போது வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என பா.ஜ.க.வை எதிர்த்து. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, சீதாராம் யெச்சூரி சந்தித்து பேசியுள்ளார். பா.ஜ.க. மதவாத கட்சி என்று சொல்கிற இடது சாரிகளும், தி.மு.க.வும் இணைந்துதான் அன்று பா.ஜ.க.வை காப்பாற்றினார்கள். இன்று மோடியை வீழ்த்துவோம் என்று சொல்வது அரசியல்.

தி.மு.க. இந்தியாவை காப்பாற்றும் என்பது கேள்விக்குறியாகும். இலங்கை தமிழர்களை காப்பாற்ற முடியாதவர்கள் தி.மு.க. இலங்கையில் 1½லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது தி.மு.க. மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது. ஆனால் அவர்களால் இலங்கை தமிழர்களை காப்பாற்ற முடியவில்லை. இப்போது. கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து இந்தியாவை வலிமையாக்குவோம் என்று கூறுவது அரசியலுக்காக, தேர்தலுக்காக, பிரசாரத்துக்காக.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com