முதலமைச்சர் விஜய் குறித்த திமுகவினரின் பேச்சுக்கு அமைச்சர் கீர்த்தனா கண்டனம்

தமிழ்நாட்டு மக்கள்,திமுகவினரின் ஆபாச - அநாகரிக பேச்சுக்களை உற்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
minister keerthana
Published on: 

முதலமைச்சர் விஜய் அவர்களை அவமதித்து, திமுக மேடையில் நின்றுகொண்டு,திமுக மகளிர் அணிப் பெண்மணி ஒருவர் பேசியிருந்தார்.இதற்கு அமைச்சர் கீர்த்தனா நாகரிகம் இல்லாத நாராசப் பேச்சுதான் திமுக மகளிர் அணிக்கும் வாடிக்கை என்பது சென்னை பொதுக்கூட்டத்தில் நிரூபணம் ஆகி இருக்கிறது என்று கூறி கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புக்குரிய முதலமைச்சர் அவர்களை அவமதித்து, திமுக மேடையில் நின்றுகொண்டு, நாக்கூசாமல் பேசியிருக்கிறார் திமுக மகளிர் அணிப் பெண்மணி ஒருவர்.அருகில் அமர்ந்திருந்த சென்னை மேயர் பிரியா இந்த நாராசப் பேச்சைக்கேட்டு குதூகலித்து சிரிக்கிறார்.

மேடையில் அமர்ந்திருந்த திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி இந்த இழிவான பேச்சுக்கு சிறு எதிர்ப்பைக்கூட காட்டாமல் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்.

தேர்தலில் தோற்ற விரக்தி உங்களுக்கு இருக்கலாம். அதற்காக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைத் தரக்குறைவாகப் பேசுவதும், அதை மேடையில் நின்று ரசிப்பதும் எந்த வகையான அரசியல் பண்பாடு?ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் நிற்பது மட்டும் பெருமையல்ல - பொதுவாழ்வில் கண்ணியத்தையும் பொறுப்பையும் காப்பதில்தான் பெண்களின் உண்மையான பெருமை இருக்கிறது.

கனிமொழி MP அவர்களே, மேயர் பிரியா அவர்களே, உங்கள் முன்னிலையில் நடந்த தரம் கெட்ட பேச்சை நீங்கள் கண்டிக்கப் போகிறீர்களா, இல்லை மௌனமாகக் கடந்து செல்லப் போகிறீர்களா?இந்த கள்ள மவுனத்தின் மூலமாக, நீங்களும் திமுக வின் ஆபாச - அநாகரிக DNA கொண்டவர்கள்தான் என்பதை நிரூபிக்கப் போகிறீர்களா?

தமிழ்நாட்டு மக்கள்,திமுக வினரின் ஆபாச - அநாகரிக பேச்சுக்களை உற்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி வரும் எல்லா தேர்தல்களிலும் அநாகரிக திமுக வுக்குத் தோல்வியைத் தான் பரிசாக வழங்குவார்கள்

என்று தெரிவித்துள்ளார்

X

Maalai Malar
www.maalaimalar.com