போதை கலாசாரத்தை ஒழிப்பேன் என வீரவசனம் பேசியவர்கள் அதை ஒளித்து வைத்து தமிழ்நாட்டை சீரழித்து கொண்டிருக்கிறார்கள் - கனிமொழி எம்பி

தவெக நிர்வாகியே இவ்வளவு பெரிய அளவில் போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்துள்ளார் என்றால், இவ்வளவு துணிச்சலைத் தந்தவர்கள் யார்?
Kanimozhi
Published on: 

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்த தவெக நிர்வாகி உட்பட 4 பேரை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

போதைப்பொருள் பறிமுதலைத் தொடர்ந்து தமிழக அரசியல் வட்டாரத்தில் தவெக-வுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொதுவெளியில் போதைப்பொருளுக்கு எதிராகப் பேசிவிட்டு, கட்சிக்குள்ளேயே கடத்தல்காரர்களை வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் தவெக தலைமைக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

ஒன்றிய அரசின் புலனாய்வு முகமைகள் இது குறித்து உரிய விசாரணை நடத்தி பின்னணியில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

பூபாலன் எனும் தவெக நிர்வாகியிடமிருந்து 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதைக் கலாசாரத்தை ஒழிப்பேன் என வீரவசனம் பேசியவர்கள் இன்றைக்குப் போதைப் பொருளை ‘ஒளித்து’ வைத்துத் தமிழ்நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உரிய விசாரணை நடத்த வேண்டும்

தனது அமைச்சர் ஒருவர் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு வந்த போதே, அதன் மீது விசாரணை நடத்தாமல் முதலமைச்சர் அவரைக் காப்பாற்றினார். இப்போது தவெக நிர்வாகியே இவ்வளவு பெரிய அளவில் போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்துள்ளார் என்றால், இவ்வளவு துணிச்சலைத் தந்தவர்கள் யார்? அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவோடுதான் இத்தனை நாளாக இது நடைபெற்றதா?

ஒன்றிய அரசின் புலனாய்வு முகமைகள் இது குறித்து உரிய விசாரணை நடத்தி பின்னணியில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com