நான் என்ன செய்தாலும் விமர்சிக்கிறார்கள்...!- 'ஹேர் கட்' விமர்சனம் குறித்து மேயர் பிரியா காட்டம்

அரசியலில் ஈடுபடும் பெண்கள் ஒழுக்கமற்றவர்களோ அல்லது மரியாதைக்கு தகுதியற்றவரோ இல்லை.
Chennai Mayor Priya
Published on: 
Summary

பொதுவாழ்வில் இருக்கும் ஒரு பெண்ணை, அவரது தோற்றம், வாழ்க்கை முறை அல்லது தனிப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மதிப்பிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை மேயர் பிரியா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

நான் என்ன செய்தாலும் அது ஒரு சர்ச்சையாகிவிடுகிறது. முதல் நாளிலிருந்து இன்று வரை, மிகச் சாதாரண விஷயங்கள் கூட ஒரு பிரச்சனையாக மாற்றப்படுகின்றன.

பர்கர் சாப்பிடுவது, முடி வெட்டுவது என நான் என்ன செய்தாலும் விமர்சிக்கிறார்கள்.

நான் பெண் என்பதாலோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தான் இப்படி நடக்கிறதோ என யோசிக்க தோன்றுகிறது.

என்னை குறித்த விஷயத்தை விமர்சிப்போரிடையே பெண்ணியவாதிகள் மறைந்துவிடுகிறார்கள்.

அரசியலில் ஈடுபடும் பெண்கள் ஒழுக்கமற்றவர்களோ அல்லது மரியாதைக்கு தகுதியற்றவரோ இல்லை.

பொதுவாழ்வில் இருக்கும் ஒரு பெண்ணை, அவரது தோற்றம், வாழ்க்கை முறை அல்லது தனிப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மதிப்பிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

ஒவ்வொரு பெண்ணுக்கும் அதற்கே உரிய கண்ணியமும் சுயமரியாதையும், தனது வாழ்க்கையை தனது விருப்பப்படி அமைத்துக்கொள்ளும் உரிமையும் உண்டு.

மேயர் என்ற பதவியைத் தாண்டி, அந்தப் பெண்ணையும் மதிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com