த.வெ.க. அரசுக்கு எஸ்.பி.வேலுமணி தரப்பு அ.தி.மு.க.-வினர் ஆதரவு

எடப்பாடி பழனிசாமி தரப்பு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
த.வெ.க. அரசுக்கு எஸ்.பி.வேலுமணி தரப்பு அ.தி.மு.க.-வினர் ஆதரவு
Published on

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி முடித்த உடன் எஸ்.பி.வேலுமணி பேசத் தொடங்கினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒரு கட்சிக்கு ஒருவரே பேச வேண்டும் என்று கூறி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூச்சலிட்டதால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம் அளித்தார்.

சபாநாயகர் கூறுகையில்," யார் பேச வேண்டும் என்பதை முடிவு செய்வது எனது உரிமை. சட்டசபையில் கட்சி தலைவர் எடுப்பது முடிவல்ல. சபாநாயரான நான் எடுப்பது தான் முடிவு. பேச வாய்ப்பு தாருங்கள் என வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளதால் அவரை பேச அனுமதித்துள்ளேன்" என்றார்.

இதைதொடர்ந்து பேசிய எஸ்.பி.வேலுமணி,"ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் தொடர வேண்டும். நாங்கள் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் இல்லை என்று மக்கள் தீர்ப்பை ஆதரித்து த.வெ.க. அரசுக்கு அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com