கூட்டணி கட்சிகளின் விருப்பமில்லாமல் தேமுதிகவை, திமுக உள்ளேக் கொண்டு வந்தது ஏன்? - திருமாவளவன்!

தவெக உடனான கூட்டணி முடிவுக்கு வன்னி அரசேக் காரணம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கூட்டணி கட்சிகளின் விருப்பமில்லாமல் தேமுதிகவை, திமுக உள்ளேக் கொண்டு வந்தது ஏன்? - திருமாவளவன்!
Published on

கூட்டணியில் இருந்து விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் வெளியேறியதற்கு திமுகவின் அணுகுமுறையே காரணம் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இதுதொடர்பாக பேசிய அவர்.,

திமுகவின் அணுகுமுறை

திமுக கூட்டணி உடைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவன் நான். இன்று அவதூளை அள்ளி வீசுபவர்களுக்கு இது தெரியாது. கூட்டணியை காப்பாற்றும் முயற்சியை திமுகவால் எடுக்கமுடியவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.

காங்கிரஸோடு நல்ல உறவை திமுக பேணியிருந்தால், காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறியிருக்குமா? தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகளுடனான திமுகவின் அணுகுமுறை எப்படி இருந்தது?

திடீரென உள்ளே வந்த தேமுதிக..

தேமுதிகவை திடீரென கூட்டணியில் சேர்த்தது மற்ற கூட்டணியினருக்கு மகிழ்ச்சியை அளித்ததா? தோற்றாலும் ஒன்றாக இருக்கலாம் என முடிவெடுக்கும் அளவில் திமுக - விசிக உறவு இல்லை.

கூட்டணியை விட்டுவிலக அமைச்சர் பதவி காரணம் இல்லை. திமுகவுடன் நல்லுறவு இல்லாததே காரணம். காங்கிரஸ், இடதுசாரிகள் சென்றபின்தான் விசிக சென்றது.

இடைத்தேர்தலில் நிற்கமாட்டேன், அமைச்சர் பதவியை ஏற்கமாட்டேன் என தொடக்கத்தில் இருந்தே மறுதலித்தவன் நான்.

தவெக கூட்டணிக்கு வன்னி அரசே காரணம்..

பின்னர் ஏன் விலகினேன்? ஒரு எளியக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் அமைச்சராகும் வாய்ப்பு வந்தது. இந்த வாய்ப்பை தவறவிடுவது ஏற்புடையதல்ல. 30 ஆண்டுகள் என்னுடன் விசுவாசமாக பயணித்தவர் வன்னி அரசு. அவருக்காகத்தான் இந்த முடிவு.

திராவிட இயக்கங்கள் இதை பாராட்ட வேண்டுமா? அவதூறு செய்யவேண்டுமா? திமுக கூட்டணியில் விசிக நீடிக்காத்தற்கு பொறுப்பு திமுகதான். கூட்டணி கட்சிகள் வெளியே சென்றதற்கு திமுகவின் அணுகுமுறை.”

எனப் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com