

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ் கட்சி ஆகிய 2 கட்சிகளும் கடந்த ஜூலை 1-ந் தேதி நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. ஆனால் த.வெ.கவுக்கு எங்கள் ஆதரவு உண்டு என்ற கருத்தை ஏற்கனவே தெளிவுபட கூறியிருக்கிறார்கள். இப்போதும் அதே நிலைபாட்டில் தான் 2 கட்சிகளும் உள்ளன. த.வெ.க. ஆட்சி 5 ஆண்டு காலம் நீடிப்பதற்கு இடது சாரி கட்சிகளின் ஆதரவு உண்டு. அதில் எந்த தயக்கவும் இல்லை என்ற கருத்தை அவர்கள் உறுதிபட தெரிவித்து இருக்கிறார்கள்.
தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்த நிலைப்பாட்டையும் இப்போதைக்கு அவர்கள் எடுக்கவில்லை.
தேர்தல் நேரத்தில் தொகுதி உடன்பாடு வைத்துக் கொள்வதில் எந்த நெருடலும் இல்லை. அது குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என்று இரு தரப்பிலும் 2 கட்சிகளின் தலைவர்களும் கூறியிருக்கிறார்கள். எனவே புதிதாக உருவாகி இருக்கிற மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆகிய 2 கட்சிகளின் ஆதரவு உண்டு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
மிசா ஒடுக்குமுறைக்கு ஆளானவர் மு.க.ஸ்டாலின் தனது உடல் மொழி எதேச்சையானது என முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்து விட்டார்.
புதிய தலைமை செயலகம் கட்டுவது தொடர்பாக அந்த பகுதி மக்களின் கருத்துக் களை கேட்டறிந்து இந்த முடிவை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.