தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை - முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை

மழை பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
CM Vijay
Published on: 
Summary

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாக இருப்பதால் தமிழகம், புதுச்சேரியில் 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை முதல் பெய்தது. இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் தேங்கிய மழை நீரை ராட்சத மோட்டார் மூலம் ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை நடத்துகிறார். மழை பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது, மருந்துகள் கையிருப்பு, நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com