எல்லாத் துறைகளிலும் ரிவர்ஸ் கியர்- த.வெ.க. அரசை சாடிய மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Published on: 
Summary

மு.க.ஸ்டாலின், GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே தமிழ்நாடு சென்றது மற்றும் கொரிய முதலீடுகள் ஆந்திராவுக்கு மாறியது குறித்து த.வெ.க. அரசின் அலட்சியத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். Guidance Tamil Nadu அமைப்பின் செயல்பாடுகள் ego-க்கு காவு கொடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், எக்ஸ் தள பக்கத்தில் ‘காலையில் கடந்து வந்த இரு செய்திகள்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில்,

1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.

2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த Guidance Tamil Nadu அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.

எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார்.

Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government என்று கூறியுள்ளார்.

X