'சின்ன பையனா இருந்தா என்ன.. இது என்ன வடிவேலு படமா'- பிரேமலதாவை சாடிய மாணிக்கம் தாகூர்

ஒரு சின்ன பையன் முதல்முறையா தேர்தல்ல நிக்கிறாரு. அப்படி ஜெயிச்சாதான் என்ன போச்சு உங்களுக்கு?இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது பிரேமலத்தவன் வழக்கம்.
'சின்ன பையனா இருந்தா என்ன.. இது என்ன வடிவேலு படமா'- பிரேமலதாவை சாடிய மாணிக்கம் தாகூர்
Published on

விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜயப்ரபாகரன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியடைந்தார்..

இது தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "50 - 60 வருசமா கட்சி நடத்துறீங்க, ஆட்சியில இருக்கீங்க. ஒரு சின்ன பையன் முதல்முறையா தேர்தல்ல நிக்கிறாரு. அப்படி ஜெயிச்சாதான் என்ன போச்சு உங்களுக்கு?

39 தொகுதி நீங்க ஜெயிச்சதா அறிவிச்சிங்கள்ல, ஒரு தொகுதில கடைசி வரைக்கும் போராடி வராரே ஒரு இளைஞர், அவரை பெரிய மனசோட நீங்க ஜெயிக்க வச்சிருந்தீங்கனா, இந்த ஆட்சியை நா தலைவணங்கி போற்றியிருப்பேன் வரவேற்றிருப்பேன்.

ஆனால் அதிலும் சூழ்ச்சி செய்து அவர் ஜெயிக்க கூடாது என்பதற்காக அவர்கள் அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி தவறு செய்துள்ளீர்கள்.

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், "பிரேமலதா முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். வாக்கு என்னும் மையத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு கிளம்பினார்கள். ஆனால் அடுத்த நாள் சென்னையில் சின்ன பையனா இருந்தா என்ன என்று பிரேமலதா பேசுகிறார். இது என்ன வடிவேல் படமா" இது பாராளுமன்ற தேர்தல். இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது பிரேமலதாவின் வழக்கம். வேண்டுமானால் அவர் சட்ட போராட்டம் நடத்தட்டும்" என்று தெரிவித்துள்ளார் .

மேலும் பேசிய அவர், "மோடியின் பதவியேற்பு விழாவில் அதானியும் அம்பானியும் கலந்து கொண்டுள்ளனர். இந்த அரசு அதானி அம்பானிகளுக்கானது தான் என்பதை மீண்டும் ஒருமுறை மோடி நிரூபித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலோடு பாஜக கூட்டணியின் ஆட்சி முடிவுக்கு வரும். ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவின் நிர்வாக தோல்வி" என்று பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com