

பண்டிகை கால உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் பொதுமக்களுக்கு, தங்களின் வழக்கமான விலைவாசி உயர்வுத் தாக்குதல் மூலம் நள்ளிரவில் தூக்கமில்லா இரவுகளை பாஜக அரசு பரிசளித்துள்ளதாக மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நவராத்திரி மற்றும் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு நாட்டின் சாமானியர்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் மோடி அரசு வழங்கியுள்ள "அமிர்த" பரிசு இதுதான்!
பண்டிகை கால உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் பொதுமக்களுக்கு, தங்களின் வழக்கமான விலைவாசி உயர்வுத் தாக்குதல் மூலம் நள்ளிரவில் தூக்கமில்லா இரவுகளை பாஜக அரசு பரிசளித்துள்ளது.
சென்னையில் 2014 ஜூன் மாதத்தில் வெறும் ரூ.1,726.50 ஆக இருந்த 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை, தற்போது அக்டோபர் 2026-ல் ரூ.2,983 ஆக எகிறியுள்ளது. மோடி ஆட்சியில் மட்டும் வணிக சிலிண்டர் விலை 72.78% அளவுக்கு உயர்ந்து, கடுமையான சுமையை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் யுபிஐ மீது MDR கட்டணத் தாக்குதல், மறுபக்கம் மளமளவென ஏறும் சிலிண்டர் விலை என சிறு உணவகங்கள் முதல் டீக்கடைகள் வரை அனைவரின் அடுப்புகளையும் அணைக்கும் வேலைதான் பாஜகவின் 'வளர்ச்சி' போலும். பண்டிகைக் காலத்தில் மக்களின் பாக்கெட்டுகளைக் காலி செய்து, சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் மோடி அரசின் இந்த இரக்கமற்ற பகற்கொள்ளைக்கு எனது வன்மையான கண்டனங்கள்! என கூறியுள்ளார்.