உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தது ஏன்? கனிமொழி எம்பி விளக்கம்

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தி.மு.க. நிலைப்பாடு மாறவில்லை என்றார்.
kanimozhi
Published on: 
Summary

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.பி. கனிமொழி, தமிழகத்துக்கு 59 எம்.பி.க்கள் கிடைப்பார்கள் என்றார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரானது நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நடைபெற உள்ளது. இதில் தொகுதி மறுவரையறை மசோதாவை இந்தக் கூட்டத்தொடரில் மீண்டும் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதாவிற்கு தமிழகத்தில் தவெக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

திமுக ஆதரவு

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியதை தொடர்ந்து, தற்போது தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தெரிவித்தார்.

உள்துறை அமைச்சரை சந்தித்த திமுக எம்பிக்கள்

இதற்கிடையே, இன்று இரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, ஆர். ராசா, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சந்தித்தனர்.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நியாயமான தொகுதி மறுவரையறை நடத்த வேண்டும் என மாநாடு நடத்தி தி.மு.க தீர்மானம் நிறைவேற்றியது.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக நிலைப்பாடு மாறவில்லை.

திமுகவின் நிலைப்பாட்டை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டிற்கு 59 எம்.பிக்கள் கிடைப்பார்கள் என தெரிவித்தார்.

X