இளம்பிஞ்சுகளின் விரலில் மோதிரம் மாட்டுவதில் காட்டும் அக்கறையை உயிரைக் காப்பதில் காட்டலாமே! - கனிமொழி கேள்வி

குழந்தைகளுக்கான மருந்துகள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உடனே உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
கனிமொழி
கனிமொழி
Published on
Summary

தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் கீழ் மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் விழா நடைபெற உள்ளது. ஆனால் சென்னை, தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பச்சிளம் குழந்தைகளுக்கான உயிர்காக்கும் மருந்துகள் இல்லையென செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், மோதிரம் போடும் விழாவை விட மருந்து தட்டுப்பாட்டை நீக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.

த.வெ.க. அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் விழா மதுரையில் வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் நடைபெறும் இந்த விழாவில் கடந்த ஜூன் 22-ந்தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரத்தை முதலமைச்சர் விஜய் வழங்குகிறார். இதற்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மகப்பேறு வார்ட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, இளம்பிஞ்சுகளின் விரலில் மோதிரம் மாட்டி விளம்பரம் தேடத் துடிக்கும் அக்கறையைக் குழந்தைகளின் உயிர்களைக் காப்பதில் கொஞ்சமாவது காட்ட வேண்டாமா? என தி.மு.க. எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தட்டுப்பாடு

சென்னை, தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மிகவும் அடிப்படைத் தேவையான உயிர்காக்கும் மருந்துகளை வழங்க முடியாமல் என்ன செய்துக்கொண்டிருக்கிறது சுகாதாரத்துறை?

இளம்பிஞ்சுகளின் விரலில் மோதிரம் மாட்டி விளம்பரம் தேடத் துடிக்கும் அக்கறையைக் குழந்தைகளின் உயிர்களைக் காப்பதில் கொஞ்சமாவது காட்ட வேண்டாமா?

குழந்தைகளுக்கான மருந்துகள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உடனே உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com