ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: காவல்துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்- இ.பி.எஸ் வலியுறுத்தல்!

பெண்கள், சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றங்களை அதற்குரிய தன்மையோடு அணுக வேண்டும் என்பதை அ.தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on
Summary

பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களை கடுமையாக அணுக வேண்டும் என்பது அ.தி.மு.க. நிலைப்பாடு என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடையவர்களும், அவர்களை காப்பாற்ற முயன்ற அதிகாரிகளும் யாராக இருந்தாலும், அவர்களின் பதவி, செல்வாக்கு பார்க்காமல் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,

அதிர்ச்சி

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.

இத்தனை ஆண்டுகளாக, பல சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது என்பது, ஒரு சமூகமாக வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்.

இதுபோன்ற Sensitive-ஆன, பல ஆண்டுகள் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த ஒரு விஷயம், தற்போது பொதுவெளியில் வந்திருக்கும் போது, காவல்துறை இந்த வழக்கை எந்தவித Pressure-ம் இன்றி கையாள வேண்டும்.

சட்ட நடவடிக்கை

தற்போது, தொடர்ந்து பல்வேறு ஆதாரங்கள், சாட்சியங்கள் காவல்துறை விசாரணையின் ஊடாக இந்த வழக்கில் சிக்கி உள்ளதாக செய்திகளில் வந்துள்ளன.

பெண்கள், சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றங்களை அதற்குரிய தன்மையோடு அணுக வேண்டும் என்பதை அ.தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பெண்களுக்கு எதிரான இந்த பாலியல் குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அது எவ்வளவு “பெரிய இடமாக” இருந்தாலும், இந்த சுதந்திர சமூகத்தில் எந்த ஒரு இடமும் அளிக்க கூடாது.

இந்த வழக்கில் யாருக்கு தொடர்பு இருந்தாலும், இதனை மறைக்க துணை நின்றது எவ்வளவு பெரிய அதிகாரமாக இருந்தாலும், அனைவர் மீதும் பாரபட்சம் இன்றி அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com