

சென்னை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* இடைத்தேர்தலை முன்னிட்டு தான் அந்தந்த மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்குகிறார்.
* தவெக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகம் மோசமான நிலையில் உள்ளது.
* தீபாவளி பண்டிகை வரக்கூடிய நிலையில் அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
* ஜிஎஸ்டி வரி வருவாய் பல மாநிலங்களில் அதிகரித்த நிலையில் நமது மாநிலத்தில் 3% மட்டுமே பதிவாகி உள்ளது.
* நிர்வாக திறமையின்மையால் வருவாய் இழப்பு, அரசு நலத்திட்டங்களும் கடுமையாக பாதிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.