

முதலமைச்சர் விஜய் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசு விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கியும் வைக்கிறார்.
அதன்படி ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு இன்று முதலமைச்சர் விஜய் செல்கிறார். இதற்காக பெருந்துறை காஞ்சிக்கோவில் ரோட்டில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் உள்ள லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஈரோடு பெருந்துறையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து முதலமைச்சர் விஜய் புறப்பட்டார்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கிருந்து கார் மூலமாக செங்கப்பள்ளி, பல்லகவுண்டன்பாளையம், விஜயமங்கலம் வழியாக பெருந்துறைக்கு வருகிறார்.
பெருந்துறை கோவை மெயின் ரோடு வழியாக வரும் முதலமைச்சர் விஜய் பெருந்துறை பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், குன்னத்தூர் நால்ரோடு சந்திப்பு, பவானி ரோட்டில் உள்ள அண்ணா சிலை சந்திப்பு வழியாக காஞ்சிக்கோவில் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்துக்கு வருகிறார். பின்னர் அங்கு நடக்கும் நலத்திட்ட உதவி விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொள்கிறார்.