Frame பாருங்க ஜி!.. மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் உடன் முதலமைச்சர் விஜய்!

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் உடன் முதலமைச்சர் விஜய்
Published on: 
Summary

முதலமைச்சர் விஜய், மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளான காவியா மாறனுக்கு கடந்த நவம்பர் 11-ந்தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற்றது.

இந்த பிரம்மாண்ட திருமண விழாவில் ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன் மற்றும் மாறன் குடும்பத்தினர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து சென்னையில் நேற்று பிரமாண்டமான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு ப்ளூ கோட் அணிந்து வந்த முதலமைச்சர் விஜய், அனிருத் மற்றும் காவியா மாறன் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சந்திப்பு

இந்த நிகழ்வில் குறிப்பிடத்தகும் வகையில் முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் சந்தித்துக்குக்கொண்டது தான். மூவரும் ஒரே பிரேமில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படத்தில் முரசொலி மாறனும் இடம்பெற்றுள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தவெக அரசு மீதும் முதலமைச்சர் விஜய் மீதும் தொடர்ந்து பல்வேறு கடுமையான விமர்சனங்களை வைத்து வரும் சூழலில் மரியாதை நிமித்தம் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அதேநேரம் தமிழசினிமாவில் உச்சநட்சத்திரங்களாக ரஜினிகாந்த் - விஜய் இருந்து வந்த சூழலில் விஜய் கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து சினிமாவுக்கு விடை கொடுத்தார்.

இந்த சூழலில் விஜய் முதலமைச்சர் ஆன பின் முதல்முறையாக ரஜினி அவரை சந்தித்துள்ளார். தேர்தல் வெற்றிக்கு பின் ஸ்டாலினை, விஜய் அவர் வீட்டுக்கு சென்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

மற்றும் பலர்

இதனிடையே எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.பி.ஐ. முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட மற்றும் பல அரசியல் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

X