திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய மகேந்திரன் கடந்த வியாழக்கிழமை அன்று தி.மு.க.வில் இணைந்தார்.
திமுக
திமுக
Published on

சென்னை:

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின்    தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து சமீபகாலமாக   தி.மு.க.வில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தங்களை இணைத்துக்கொண்டு வருகின்றனர். 

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய மகேந்திரன் கடந்த வியாழக்கிழமை அன்று தி.மு.க.வில் இணைந்தார். இந்நிலையில்   அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம் நாளை தி.மு.க.வில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தோப்பு வெங்கடாசலத்துடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் 300 பேர் நாளை   மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com