வடசென்னையில் தினகரன் ஆதரவாளர்கள் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ் நடவடிக்கை

அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் தொடர்ந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இன்று வடசென்னை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர்.
வடசென்னையில் தினகரன் ஆதரவாளர்கள் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ் நடவடிக்கை
Published on

சென்னை:

அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் தொடர்ந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இன்று வடசென்னை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் வடசென்னை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட பொருளாளர் கிரிநாத், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாந்தி, திரு.வி.க. நகர் பகுதிக் கழகச் செயலாளர் சுகுமார், ராயபுரம் பகுதி செயலாளர் ராம ஜெயம், சென்னை மாநகராட்சி முன்னாள் உறுப்பினர் சந்தான கிருஷ்ணன், அம்மா பேரவைத் தலைவர் சுகுமார், எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவர் செல்வம், மகளிர் அணி துணைத் தலைவர் வசந்திதாசன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல புலவர் செல்வராஜ், அரவிந்த், வெங்கடேசன், சுந்தர், சங்கர சுப்ரமணியன், பிரபாகர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துறைமுகம் பகுதியை சேர்ந்த, ரவி, சிவசங்கர், சேகரன், சுபத்கான், பாலசுப்ரமணியன். எழும்பூர் பகுதியை சேர்ந்த சரவணன், சந்தான், பிரேம்குமார்.

ராயபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் ஜெயராமன், ஹேமாவதி, யாயாதிவர்மா, அய்யாதுரை, லோகு, சசி குமார், பரசுராமன், கணேச மூர்த்தி, கனகராஜ், சிட்டி பாபு, முகமது சலாவுதீன் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

திரு.வி.க. நகர் பகுதியை சேர்ந்த குமார், தங்கமணி, புரசை தேவராஜ், ஸ்ரீதர், ஹேமமாலினி, காந்தி, மணிமாறன், நீலகண்டன், சாம்ராஜ், நாசர், பெரியசாமி, சதீஷ், சீனிவாசன், கோவிந்தராஜன், ரவி, ரமேஷ், பிரபு உள்ளிட்டோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் கிழக்கு மாவட்ட முன்னாள் எம்.பி. கோபால், மாவட்ட துணை செயலாளர் சிட்டிபாபு மற்றும் நிர்வாகிகள் மீதும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com