மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பு: மத்திய அரசு பரிசீலனை - வெங்கையா நாயுடு தகவல்

மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் வழிவகுத்துள்ளது. இந்தப் பிரச்சினை குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது என வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பு: மத்திய அரசு பரிசீலனை - வெங்கையா நாயுடு தகவல்
Published on

இறைச்சிக்காக கால்நடை சந்தையில் மாடுகளை விற்கவும், வாங்கவும் தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருப்பது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. எதிர்ப்பு போராட்டங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

இந்த நிலையில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் இந்தப் பிரச்சினை குறித்து கூறுகையில், “சுப்ரீம் கோர்ட்டும், மிருகவதைக்கு எதிரான பாராளுமன்ற குழுவும் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில்தான் இந்த விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டன” என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com