

கடவுளின் அருள் அனைவருக்கும் நல்வாழ்வை கொண்டு வரட்டும். மேலும் நாடு தொடர்ச்சியான வளர்ச்சி பாதையில் தொடர்ந்து முன்னேறட்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்-மந்திரி, நாட்டின் பிரதமர் என அரசியல் தலைவராக பிரதமர் மோடி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி அவரது தலைமையை பாராட்டி மத்திய மந்திரி சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுச் சேவையில் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி பிரதமர் மோடி இன்று காலை டெல்லி சரோஜினி நகரில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபாடு செய்தார்.
இதையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
டெல்லியில் உள்ள விநாயகர் கோவிலில் இன்று காலை நான் வழிபாடுகள், சடங்குகள் செய்தேன். நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியதற்காக பிரார்த்தனை செய்தேன்.
கடவுளின் அருள் அனைவருக்கும் நல்வாழ்வை கொண்டு வரட்டும். மேலும் நாடு தொடர்ச்சியான வளர்ச்சி பாதையில் தொடர்ந்து முன்னேறட்டும்.
இவ்வாறு அந்த பதிவில் மோடி தெரிவித்துள்ளார்.