

குஜராத் முதலமைச்சராக அக்டோபர் 7, 2001 அன்று பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று, தற்போது அவரது அரசியல் வாழ்க்கை 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
குஜராத்தில் கடந்த 2001 அன்று நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற போதிலும், அக்கட்சியின் செல்வாக்கு சரிய தொடங்கியதால், அம்மாநிலத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து மோடி பதவியேற்ற சில மாதங்களில் கட்சி முழுவதுமாக புணரமைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் மாநில பேரிடர் மேலாண்மை சட்டம் குஜராத்தில் 2003-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து மோடி தனது திறமையை நிரூபிக்கும் விதமாக, வைப்ரண்ட் குஜராத் உச்சி மாநாட்டை 2003-ஆம் ஆண்டு நடத்தினார்.
2006-ல் தொடங்கப்பட்ட ஜோதிகிராம் யோஜனா திட்டத்தின் மூலம், கிராமங்களுக்கு சீரற்ற முறையில் விநியோக்கிக்கப்பட்ட மின்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தடையற்ற மின்சார விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக விவசாயம் அல்லாத பொருளாதார நடவடிக்கைகள் விரிவடைந்து, மானியங்கள் ஏறக்குறைய பாதியாக குறைக்கப்பட்டு, சுமார் 18,000 கிராமங்களுக்கு மூன்று கட்ட மின்சாரம் கிடைத்தது.
2007-ல் தொடங்கப்பட்ட சாகர்கேடு சர்வாங்கி விகாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் மாநிலத்தின் உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம், நீர்ப்பாசனம், கடல்நீர் கட்டுப்பாடு, கடலோரப் பாதுகாப்பு மற்றும் மீன்வள மேம்பாடு ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டது.
2009-ல் தொடங்கப்பட்ட கரீப் கல்யாண் மேளா திட்டத்தின் கீழ் குடிமக்களுக்கு நலத்திட்டங்கள் நேரடியாக வழங்கப்பட்டன.
உபரி வெள்ள நீர் 332 கி.மீ நீளமுள்ள கால்வாய்கள் வழியாக கொண்டு செல்லப்பட்டு, நர்மதா நீர் சௌராஷ்டிரா முழுவதும் உள்ள நீர்தேக்கங்களை அடைந்து சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன வசதி பெற்றது.
இதன் விளைவாக, தடுப்பணைகள், பண்ணை குளங்கள், நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள், கால்வாய்கள் மற்றும் படுகைகளுக்கு இடையேயான நீர்மாற்றுத் திட்டங்கள் வகுக்கப்பட்டன.
இதையடுத்து 2017-ஆம் ஆண்டு வெளியான சி.ஏ.ஜி. அறிக்கையில் மாநிலத்தின் நிலத்தடி நீர் அளவு 2002-ஆம் ஆண்டை விட சுமார் 50% அதிகரித்துள்ளதாக பதிவு செய்தது.
நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் கீழ் துறைமுகங்கள் சாலைகள், ரெயில் நிலையங்கள் மற்றும் தொழிற்பேட்டைகளுடன் இணைக்கப்பட்டன.
மேலும் முந்திரா, ஹசிரா மற்றும் பிபாவாவ் ஆகியவை முக்கிய துறைமுகங்களாக வளர்ந்தன.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமை 2013 ஜூன் மாதம் நரேந்திர மோடியை 2014 தேர்தலுக்கு பிரச்சாரக் குழுத் தலைவராக நியமித்து, அவரை பிரதமர் வேட்பாளராகவும் அறிவித்தது.
மே 16 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, பாஜக முந்தையை ஆண்டுகளில் பெற்றிருந்த எண்ணிக்கையை விட 282 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது.
இது அப்போதைய 545 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில், பெரும்பான்மையாக உருவெடுத்தது. 1984-ஆம் ஆண்டிற்கு பிறகு மிகப்பெரிய பெரும்பான்மை பலத்துடன் மோடி தலைமையிலான அரசாங்கம் ஆட்சி அமைத்தது.
மோடி பிரதமராக பதவியேற்றவுடன் ஜன் தன் யோஜனா திட்டத்தை தொடங்கினார். இதன்மூலம் நாட்டில் 59 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில் ரூ. 3.1 லட்சம் கோடிக்கும் அதிகமான வைப்புத்தொகை செலுத்தப்பட்டது.
இந்த கணக்குகளில் 33 கோடி கணக்குகள் பெண்களின் வசம் இருந்தன. இது நேரடி பணப் பரிமாற்றத்தை கொண்டுவரவும், நலத்திட்டங்கள் வழங்கும் முறையை மாற்றியமைக்கவும் உதவியது.
ஆகஸ்ட் 2026-ஆம் ஆண்டிற்குள் நேரடி பணப் பரிமாற்றம் மூலம், 56 அமைச்சகங்கள் மூலமாக 53.2 லட்சம் கோடி மதிப்பிலான 320 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
தேசத்தில் கழிப்பறைகள் இல்லாததால் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் பேசினார்.
இதையடுத்து சுகாதார இயக்கமாக ‘ஸ்வச் பாரத் இயக்கம்’ தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2016-ல் தொடங்கப்பட்ட உஜ்வாலா யோஜனா திடத்தின் மூலம், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு 10.5 கோடி இலவச எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டன.
மோடி அரசாங்கத்தின் கீழ், ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு ஏழைகளுக்கு இலவச சிகிச்சை வழங்கப்பட்டது.
இந்தியாவில் வரி எல்லைகளை நீக்கி, பொருளாதார ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் 2017 ஜூலையில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
மோடியின் இரண்டாவது அமைச்சரவை மிக முக்கியமான அரசியல் முடிவுகளை எடுத்தது.
அதில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.
இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றி அமைக்கப்பட்டும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாக உயர்த்தப்பட்டும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் அனுமதி வாங்கப்பட்டது.
பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்படும் சிறுபான்மை சமூகங்களுக்கு குடியுரிமை பெறுவதற்கான வழியை வழங்கும் குடியுரிமை சட்ட திருத்த சட்டம் (CAA) 2019-ல் நிறைவேற்றப்பட்டது.
கோவிட் பெருந்தொற்றின் போது உள்நாட்டு தடுப்பூசிகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டன. இதையடுத்து ஆத்மநிர்பர் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு, நாட்டில் யுபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்தது.
இதையடுத்து 2024ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகவும், மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, பதிலடி தரும் விதமாக 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டு, 2025 மே மாதம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது முதன்முதலாக தாக்குதல் நடத்தப்பட்டது.