மக்கள் பணியில் 25 ஆண்டுகள் நிறைவு - பிள்ளையார் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

மே 26, 2014 முதல் இந்தியாவின் 14-வது பிரதமராகவும் பதவி வகித்து வருகிறார்.
PM Modi
Published on: 
Summary

மக்கள் பணியில் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து பிரதமர் மோடி பிள்ளையார் கோவிலில் வழிபாடு செய்தார்.

நரேந்திர மோடி இந்தியாவின் தற்போதைய பிரதமரும், குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார்.

நரேந்திர மோடி அக்டோபர் 7, 2001 முதல் மே 22, 2014 வரை குஜராத் முதலமைச்சராகவும், மே 26, 2014 முதல் இந்தியாவின் 14-வது பிரதமராகவும் பதவி வகித்து வருகிறார்.

குஜராத் மாநில முதலமைச்சர், நாட்டின் பிரதமர் என அதிகாரப் பதவியில் மோடி அமர்ந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்தது.

இந்நிலையில், மக்கள் பணியில் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து பிரதமர் மோடி டெல்லி சரோஜினி நகரில் உள்ள பிள்ளையார் கோவிலில் இன்று வழிபாடு செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com