அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தேமுதிகவினர்

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் தேமுதிகவினர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு அமைச்சர் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தேமுதிகவினர்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தேமுதிகவினர்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதையடுத்து தே.மு.தி.க. நகர துணை செயலாளர் அந்தோணிபால் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த 60 பேர் தாங்கள் சார்ந்திருந்த கட்சியின் உறுப்பினர் அட்டைகளை அமைச்சரிடம் கொடுத்தனர்.

பின்னர் அமைச்சர் முன்னிலையில் அவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர். பின்னர் அவர்களுக்கு அமைச்சர் அ.தி.மு.க. உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், கழக பகுதி செயலாளர்கள் சேசு, சுப்பிரமணி, மோகன், முரளிதரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com