குஜராத்தில் அமித் ஷாவை எதிர்க்கும் காங்கிரஸ் வேட்பாளர் மனுதாக்கல் செய்தார்

பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைவர் அமித் ஷாவை எதிர்த்து குஜராத்தின் காந்தி நகரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சாவ்டா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். #LSpolls #AmitShah #Gandhinagar #Chavda
குஜராத்தில் அமித் ஷாவை எதிர்க்கும் காங்கிரஸ் வேட்பாளர் மனுதாக்கல் செய்தார்
Published on

அகமதாபாத்:

பாராளுமன்ற தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. குஜராத் மாநிலத்தில் 25ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தின் காந்திநகர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சாவ்டா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் தற்போது குஜராத் மாநிலம் காந்திநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளார். இவர் பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் காந்தி நகர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சாவ்டா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். #LSpolls #AmitShah #Gandhinagar #Chavda

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com