உத்தரப்பிரதேசம் பா.ஜ.க எம்.எல்.ஏ லோகேந்திர சிங் சாலை விபத்தில் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலம் நூர்பூர் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ லோகேந்திர சிங் இன்று காலை சீதாபூரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேசம் பா.ஜ.க எம்.எல்.ஏ லோகேந்திர சிங் சாலை விபத்தில் உயிரிழப்பு
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் நூர்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் லோகேந்திர சிங். இன்று காலை தனது காரில் அவர் சென்று கொண்டிருந்த போது, சிதாபூர் அருகே சாலையின் எதிரே வந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் லோகேந்திர சிங் அவருடன் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு போலீசார் மற்றும் கார் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com