தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று ’டோரதி’ - இயக்குநர் ராஜூமுருகன் பாராட்டு.!

டோரதி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
Raju Murugan
Published on: 

டோரதி திரைப்படம்

கார்த்திக சுப்பராஜின் இயக்கத்தில் உருவான 10வது திரைப்படம் டோரதி. சாதியக் கட்டமைப்பு மற்றும் ஆணாதிக்கச் சமூகம் எவ்வாறு மாற்று பாலினத்தவர்களின் அடையாளத்தை நசுக்குகிறது என்பதை மிகத் துணிச்சலாகவும் எதார்த்தமாகவும் பேசியுள்ளது. இத்திரைப்பட்ம் வெளியாவதற்கு முன்பே டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது.

இந்த நிலையில் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், இயக்குநர் ராஜுமுருகன் டோரதி திரைப்படம் தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று என்று பாராட்டியிருக்கிறார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது

தமிழ்சினிமாவின் மாஸ்டர் பீஸ்

டோரதி தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. பாலின ஏற்றத்தாழ்வுகளை அடித்து நொறுக்கும் ஆயுதமாய், அழகாய், ஆங்காரமாய் நம்முன் நிமிர்ந்து நிற்கிறாள் இந்த டோரதி. பேசா பொருளை பேசத் துணிந்து, அதை இவ்வளவு அற்புதமாய் செய்திருக்கும் தோழன் கார்த்திக் சுப்புராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நன்றி கார்த்தி. மிகச்சிறந்த பங்களிப்பை அளித்திருக்கும் சனந்த், ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட அத்தனை நடிகர்களுக்கும், ஒளிப்பதிவாளர் திரு உள்ளிட்ட மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். கடும் நெடும் பயணங்களில் தீரவே தீராத காதலாய் உடன் வரும் ராஜா சாருக்கு நன்றியை தவிர வேறென்ன சொல்லமுடியும்

என்று தெரிவித்திருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com