லியோ, பீஸ்ட் படங்களின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவிற்கு அரசு புதிய பொறுப்பு!

தான் படித்த எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரிக்குத் தலைவரானார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா.
லியோ, பீஸ்ட் படங்களின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவிற்கு அரசு புதிய பொறுப்பு!
Published on: 

தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், ஈரம், நண்பன், விண்ணைத் தாண்டி வருவாயா, ராதே ஷியாம், லியோ, பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

இவர் இதே நிறுவனத்தின் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com