கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை

Dorothy
Published on: 
Summary

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியான நிலையில், இந்த படத்தின் சர்வதேச வெளியீட்டிற்கு மலேசியாவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள டோரதி திரைப்படம், இளையராஜா இசையில் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா

இந்த படத்தை தம்மம் பிலிம்ஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

ஓரினச் சேர்க்கை மற்றும் சாதிய பின்புலங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த மாதம் திரையிடப்பட்டது.

டோரதி திரைப்படம் சுமார் 10 ஆண்டுகள் கழித்து, டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

கதைக்களம்

1990களின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் கிராமப்புறத்தில் நடக்கும் கதையாக டோரதி அமைந்துள்ளது.

கார்த்தி மற்றும் சுப்பு என்ற இரண்டு சிறுவயது நண்பர்களின் உலகத்திற்குள், டோரதி என்ற கீர்த்தி சுரேஷ் நுழைந்த பிறகு, நண்பர்களின் வாழ்க்கை மாறுகிறது.

கிராமப்புறங்களில் நிகழும் சாதிப் பிரிவினைகள், வன்முறை மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த ஆணாதிக்கம் ஆகியவற்றை சுற்றி இந்த கதைக்களம் நகர்கிறது.

மலேசியாவில் தடை

மலேசியாவில் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஓரினச்சேர்க்கை காரணமாக, டோரதி திரைப்படம் மலேசியாவில் வெளியாவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com