செப்டம்பர் 9-ந்தேதி கூட்டணி கட்சிகளுடன் த.வெ.க. ஆலோசனைக் கூட்டம்: கம்யூனிஸ்டு கட்சிகள் புறக்கணிப்பு?
* த.வெ.க. கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் சார்பில் எனக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது
* சென்னை அண்ணாநகரில் உள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும் அவர்கள் சந்தித்து பேசினார்கள்.
தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து திமுக ஒருபோதும் அஞ்சாது- கனிமொழி எம்பி
* தவெக அரசு, தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளது.
* மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் தி.மு.கழகம் அல்ல.
தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது... ஊழல்வாதிகளுக்கு தான் இல்லை - அமைச்சர் நிர்மல்குமார்
* திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் இணைந்து வரும் தேர்தலை எதிர்கொள்ளும்.
* நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் சட்டசபை நடைபெறுகிறது.
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்
* காகா கலேல்கர் தலைமையிலான முதலாம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தயாரித்த அந்தப் பட்டியலில் மொத்தம் 2399 சாதிகள் இடம் பெற்றிருந்தன.
* ஒரு காலத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டிருந்த தாசரி, ஜங்கம் போன்ற வகுப்பினர் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி தான், 1993-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
GOLD PRICE TODAY: நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்... அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 குறைந்து ரூ.14,190-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
ஆசிரியர்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்- முதலமைச்சர் விஜய்
* மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
* ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்!
தவெக அரசின் பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டோம்- மு.க.ஸ்டாலின்
* உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.
* இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு.
மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்
* மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!
* சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி!
தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார்..!- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
* வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
* வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தேசப்பற்றையும், தியாகத்தையும் இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுவோம்!
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - தொழிலாளி உயிரிழப்பு
* சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் உள்ள சின்னதம்பி பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
* அடுத்தடுத்து வெடிச்சத்தம் கேட்பதாலும் வெடித்து சிதறுவதாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
* அபிராமபுரத்தில் உள்ள கே.என்.நேரு சகோதரர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
* மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.