முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அபிராமபுரத்தில் உள்ள கே.என்.நேரு சகோதரர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
KN Nehru
Published on
Summary

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கே.என்.நேரு

திருச்சி தில்லைநகரில் உள்ள கே.என்.நேரு வீட்டிலும், சென்னை மயிலாப்பூரில் உள்ள வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அபிராமபுரத்தில் உள்ள கே.என்.நேரு சகோதரர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

பார்ட்டி ஃபண்ட் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை என தகவல் வெளியாகி உள்ளது.

பல்வேறு நிறுவனங்களை மிரட்டி, சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் புகார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com