தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து திமுக ஒருபோதும் அஞ்சாது- கனிமொழி எம்பி

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
Kanimozhi MP
Published on

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனைக்கு தி.மு.க. எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

காழ்ப்புணர்ச்சி

சட்டமன்றத்தில் தி.மு.கழகத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், தொடர்ந்து அவதூறுகளையும் திசைதிருப்பல் நாடகங்களையும் அரங்கேற்றி வந்த தவெக அரசு, தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்று, கழக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என். நேரு அவர்களைப் பழிவாங்கப் பார்க்கிறது.

ஜனநாயக விரோதம்

மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் தி.மு.கழகம் அல்ல. எதிர்க்கட்சியின் குரல்வளையை நெரிப்பதற்காக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் இந்த ஜனநாயக விரோத தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து தி.மு.கழகம் ஒருபோதும் அஞ்சாது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com