

தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
தங்கம் விலை கடந்த மாதம் (ஆகஸ்டு) தொடக்கத்தில் குறைந்து இருந்து, பின்னர் 'கிடுகிடு'வென அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியது.
பிறகு கடந்த மாதம் 27-ந்தேதியில் இருந்து குறையத் தொடங்கிய நிலையில், இப்போது ஏற்ற-இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த 1, 2-ந்தேதிகளில் விலை குறைந்து, நேற்று முன்தினம் உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் விலை அதிகரித்து இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 240-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.120-ம், பவுனுக்கு ரூ.960-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 360-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 880-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ரூ.1,13,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 குறைந்து ரூ.14,190-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
04-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880
03-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,920
02-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600
01-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,400
31-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,960
04-08-2026- ஒரு கிராம் ரூ.255
03-08-2026- ஒரு கிராம் ரூ.255
02-08-2026- ஒரு கிராம் ரூ.250
01-09-2026- ஒரு கிராம் ரூ.250
31-08-2026- ஒரு கிராம் ரூ.260