தமிழக செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 25 செப். 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

தமிழ்நாடு செய்திப்பிரிவு

ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு இரண்டாவது தங்கத்தை பெற்று தந்த வீரர்கள்...

* இந்திய அணி வீரர்களான கமல்ஜீத் மற்றும் சுருச்சி சிங் ஆகியோர் துப்பாக்கி சுடுதலில் தங்கத்தை வென்றனர்.

* ஆடவர் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் குழு போட்டியில் இந்திய அணி வீரர்கள் வெள்ளி பதக்கத்தை வென்றனர்.

சிக்கிமில் தொடர்ந்து பெய்த கனமழை - நிலச்சரிவு ஏற்பட்டு குடியிருப்புகள் சேதம்...

* மேற்கு சிக்கிமின் யுக்சோம்-தாஷிடிங் பகுதியில் உள்ள ரிம்பி கிராமத்தில் தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் அதிகனமழை பெய்தது.

* இந்த விபத்தில் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகள், தனியார் ஆலைகள் மற்றும் சாலைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ரெயில் தண்டவாளத்தில் சிக்கிய கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண் ஓட்டுநர்.. வைரலான வீடியோ...

* கேரளாவில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ஓட்டுநர் இயக்கிய வாகனம் தண்டவாளத்தில் சிக்கியது.

* இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரெயில் தண்டவாளத்தில் சிக்கியிருந்த காரை மீட்டு, போக்குவரத்தை சீர் செய்தனர்.

GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

* தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.14,010-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

* வேங்கிக்கால் தென்றல் நகர் பகுதியில் உள்ள அண்ணாதுரை வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

* பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரான் ட்ரோன்களை அழிக்கும் லேசர் தொழில்நுட்பம் - ஹார்முஸ் ஜலசந்தியில் நிலை நிறுத்திய அமெரிக்கா...

* குறைந்த விலையில், அதிக திறனில் சிறப்பாக செயல்படும் லேசர்களை அமெரிக்கா தயாரித்துள்ளது.

* ஹார்முஸ் ஜலசந்தியில் எதிரி நாட்டு ராணுவத்தின் ட்ரோன்களை தாக்கி அழிக்கும் வகையில், புதிய லேசர் தொழில்நுட்பத்தை அமெரிக்கா பயன்படுத்த உள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் - மாணிக்கம் தாகூர்

* இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஈடுபட்டு வந்திருப்பது இப்போது வெட்டவெளிச்சத்தி

* இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் இணையவிடாமல் இவர் தடுத்து நிறுத்தி வந்திருப்பது ஆதாரங்களுடன் தற்போது அம்பலமாகியுள்ளது.

SCROLL FOR NEXT