சிக்கிமில் தொடர்ந்து பெய்த கனமழை - நிலச்சரிவு ஏற்பட்டு குடியிருப்புகள் சேதம்

மேற்கு சிக்கிமில் உள்ள ரிம்பி கிராமத்தில் நேற்று இரவு முழுவதும் அதிகனமழை பெய்தது.
Sikkim landslide
Published on: 
Summary

சிக்கிமில் தொடர்து அதிகனமழை பெய்து வரும் நிலையில், மண் சரிவு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகளை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

சிக்கிமில் நிலச்சரிவு

மேற்கு சிக்கிமின் யுக்சோம்-தாஷிடிங் பகுதியில் உள்ள ரிம்பி கிராமத்தில் தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் அதிகனமழை பெய்தது. இதையடுத்து அப்பகுதியில் திடீரென்று இன்று நிலச்சரிவு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து மலையில் உள்ள பாறைகள் மற்றும் பெருமளவிலான மண் சரிந்து, கீழ் நோக்கி பாய்ந்தது.

குடியிருப்புகள் சேதம்

இந்த விபத்தில் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகள், தனியார் ஆலைகள் மற்றும் சாலைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் இதுவரையில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று சிக்கிமின் தடங் பகுதியிலும் கனமழை பெய்ததை தொடர்ந்து, நிலச்சரிவு ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் பாதிப்புக்கு உள்ளாகியது.

முன்னதாக கடந்த வாரம், லிங்டிங் பகுதியில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில், அப்பகுதியில் உள்ள ஒரு வீடு சேதமடைந்து, மழை நீரால் பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com