

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் இந்தியா தனது இரண்டாவது தங்கத்தை வென்றுள்ளது.
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து இன்று 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் கலப்பு (air pistol mixed team event) அணி பிரிவில் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி வீரர்களான கமல்ஜீத் மற்றும் சுருச்சி சிங் ஆகியோர், தென்கொரிய வீரர்களை எதிர்த்து விளையாடினர்.
இதைத்தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் 484.6 புள்ளிகள் பெற்று, இந்தியாவுக்கு இரண்டாவது தங்கத்தை பெற்று தந்தனர்.
முன்னதாக நடந்த ஆடவர் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் 3 பொசிஷன்ஸ் குழு போட்டியில் (rifle 3 positions team event), இந்திய அணி வீரர்களான நீரஜ் குமார், ஐஸ்வர்ய பிரதாப் சிங் தோமர் மற்றும் ருத்ரான்ஷ் பாட்டீல் ஆகியோர் 1762-94x என்ற புள்ளிகளை பெற்று வெள்ளி பதக்கத்தை வென்றனர்.
இந்த போட்டியில் சீன அணி வீரர்கள் 1766-95x என்ற புள்ளிகளை பெற்று நூலிழையில் தங்க பதக்கத்தை வென்றனர்.
இதன்மூலம் இந்திய அணி 2 தங்கம், 8 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் பெற்று, மொத்தம் 19 பதக்கங்களுடன், தரவரிசை பட்டியலில் 12-வது இடத்தில் உள்ளனர்.
சீன அணி 85 தங்கம், 30 வெள்ளி மற்றும் 20 வெண்கலம் பெற்று, மொத்தம் 135 பதக்கங்களுடன், தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர்.