கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 
தமிழக செய்திகள்

Tamil News Live: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது- 04 ஆகஸ்ட் 2026

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

மாலை மலர்

உதயநிதி மீதான கைது நடவடிக்கை ஜனநாயக உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும்- தங்கம் தென்னரசு

உதயநிதி ஸ்டாலின் கைது- தமிழகம் முழுவதும் சாலை போராட்டத்தில் ஈடுபடும் தி.மு.க.வினர்

உதயநிதி ஸ்டாலின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை: ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும்!- அன்புமணி

ஆங்கிலேயரின் வாய்ப்பூட்டு சட்டத்துக்கு இணையாக எதிர்க்கட்சிகளை முடக்கும் செயலுக்கு கண்டனம்- பிரேமலதா

உதயநிதி ஸ்டாலின் கைது- தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் கைது

அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம் பேட்டி

உதயநிதியை கைது செய்து அழைத்துச் செல்லப்படும் வாகனத்தை மறித்து தி.மு.க.வினர் போராட்டம்

உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்

கைதுக்கு பயப்படுபவன் நான் அல்ல... உதயநிதி

கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்படுகிறார்.

விவசாயிகள் பிரச்சனையை திசை திருப்பவே இவ்விவகாரத்தை த.வெ.க. அரசு கையில் எடுத்துள்ளது- உதயநிதி ஸ்டாலின்

பேசாததை ஒன்றை பேசியதாக என் மீது பொய் பரப்புரையை த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது- உதயநிதி ஸ்டாலின்

திசை திருப்பும் நடவடிக்கையில் மட்டுமே இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. முக்கிய பிரச்சனை வரும்போது இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது- உதயநிதி ஸ்டாலின்

என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்- உதயநிதி ஸ்டாலின்

தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சை போலீசார் கைது செய்துள்ளனர்.

காவல்துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

காவல்துறையிடம் தெரிவிக்க அரசு வழக்கறிஞர் மூலம் நீதிபதி அறிவுறுத்தல்.

நண்பகல் 12 மணிவரை உதயநிதியை கைது செய்யும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்.

கைது நடவடிக்கை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியுடன் காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய நடவடிக்கை- சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வருகை

தஞ்சாவூர் திமுக ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேச்சு அதிர்ச்சியளிக்கிறது - காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி

இது உச்சக்கட்ட அடக்குமுறை, அராஜகம்- உதயநிதியை கைது செய்ய நீலாங்கரை வீட்டில் குவிக்கப்பட்ட போலீசார்: கே.என். நேரு

உதயநிதி கைது நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு- இன்று பிற்பகலில் விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி தகவல்

உதயநிதி ஸ்டாலின் மீது பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதயநிதி குளித்து முடித்த பிறகு தான் வருவார்- மா.சுப்பிரமணியன்

காவல்துறைக்கு எதிராக கண்டன தி.மு.க.வினர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

10 நிமிடம், 10 நிமிடம் என எவ்வளவு நேரம் கூறுவீர்கள்? சட்டப்பூர்வ கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்- இணை ஆணையர் விஜயகுமார் அறிவுறுத்தல்

கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் ஒகேனக்கல்லுக்கு வந்து சேர்ந்தது

* கேரளம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

*  திரிவேணி சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வந்தது.

த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல் - மகளிருக்கு ரூ.2,500 அறிவிப்பு வெளியாகுமா?

* அனல்பறக்கும் விவாதங்கள், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். 

உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய தஞ்சை போலீசார் வருகை?- பரபரப்பில் நீலாங்கரை

* சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

* உதயநிதி ஸ்டாலின் வீடு அருகே பேரிகார்டு அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

சட்டசபை தேர்தலில் தோல்வி: தமிழக பா.ஜ.க. தலைவர் விரைவில் மாற்றம்

* புதிய மாநிலத் தலைவரை நியமிப்பதற்கான ஆலோசனை இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது.

* 2029-ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டே புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.