உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய தஞ்சை போலீசார் வருகை?- பரபரப்பில் நீலாங்கரை

உதயநிதி ஸ்டாலின் வீடு அருகே பேரிகார்டு அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ள போலீசார்
உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ள போலீசார்
Published on

சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த த.வெ.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், த.வெ.க தொண்டர்களின் முற்றுகை போராட்டம் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் சென்னை நீலாங்கரையில் உள்ள முன்னாள் துணை முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் வீடு அருகே பேரிகார்டு அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு காவல் இணை ஆணையர் விஜயகுமார் வருகை தந்தார். அப்போது அவர், உதயநிதி கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூறினார். அதற்கு முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதயநிதி ஒத்துழைப்பு தருவார் என்று கூறியதுடன் அவரது வழக்கறிஞர் வரும் வரை பொறுமை காக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனால் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. இதற்கிடையே, உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வருகை தந்துள்ளார். இதனால் நீலாங்கரை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com